Saturday, January 22, 2011

நீண்ட இடைவெளிக்கு பிறகு பலவித மாற்றங்களுடன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பலவித மாற்றங்களுடன்


வாழ்கை என்னும் இந்த மிகபெரிய போராட்டத்துல  பலவித தடைகளை தாண்டி இன்னும் பெரிய தடைகளை  எதிர் நோக்கி போய் கொண்டு இருந்த வேலையில் வேலை இல்லாம இருந்த எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை போட்டு இழந்து உள்ளேன் அந்த அனுபவம் தான் சிறிது நாளைக்கு முன்பு எனக்கு ஒரு வேலை வாங்கி தந்தது .

அது ஒரு மார்க்கெட்டிங் வேலை அந்த வேலையில் சேர்ந்து வேலை பார்த்து அதிலும் மிக பெரிய தடைகளை தாண்டி தட்டி தடுமாறி தாண்டி வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் சமுதாயம் என்னும் மக்கள் பலர் விரட்ட இந்த சமுதாயத்தில் என்னை நிலை நிறுத்திக்கொள்ள அப்படி ஒரு வெளி வேஷம் இருந்தால் தான் இந்த சமுதாயம் நம்மை அங்கிகரிக்கும் அதாவது நாம் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த மனிதன் ஆனால் உண்மையில் நம் மனதில் எந்த ஒரு நிம்மதியும் இல்லாமல் கடைசி வரை மற்றவர்களுகாக மட்டும் வாழ்ந்து மடிவோம் .


அதிலும் முக்கியம் பணம் இந்த பணத்தை தேடி பலர் தங்களை மறந்து தங்கள் வாழ்வை  மறந்து பணத்தை மட்டும்  தான் மனதில் வைத்து கொண்டு வாழ்க்கையே வின் அடித்து கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம் .  அந்த ஓட்டத்தில் நானும் என் குடும்பம்திற்காக ஓடுகிறேன் நான் மட்டும் அல்ல அனைவரும் தான் இந்த குடும்பம் சூழ்நிலை தான் மனிதனை என்றும் விரட்ட நாமெல்லாம் வாழ்கையில் எப்பொழுதும் எதையோ ஒன்றை தேடி கொண்டு ஓடுகிறோம் ...
Related Posts with Thumbnails