Thursday, October 21, 2010

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்


இன்று சென்னை கே கே நகரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச கலர் டிவி கொடுக்கபட்டது இதில் விசேஷம் என்னவென்றல்  குடிசையில் வாழும் ஏழை மக்களும் சேரி பல கோடிக்கு சொந்தமான பணகரரும் சேரி அந்த இலவச கலர் டிவியா  வாங்க ஒரு வரிசையில் நின்னது தான்  இலவசம் என்றல் பிணமும் கூட வரும் போல அதாவது காசு என்றல் பிணம் கூட வாயா திறக்கும் என்ற சொல்வது போல இந்த அரசு இலவசம் இலவசம் அனைத்தும் இலவசம்  என்று கொடுத்து  நம் மக்களை நல்ல சோம்பேறி ஆக்கி உள்ளது.

டிவி வாங்க வந்த பணம் படைத்தவரிடம்  கேட்டதுக்கு அரசு இலவசமாய் கொடுப்பதை ஏன் விட வேண்டும் நங்கள் விட்டால் எங்களுக்கு உரிய டிவியை வேறு ஒருவர் பெற்று அதன் பலனை பெற்று விடுவர் என்று கூறுகின்றனர்.

உண்மையில் அரசாங்கம் நமக்கு தருவது இலவசம் அல்ல நாம் செலுத்தும்  வரி முலம் தான் அரசு நமக்கு இதை தருகின்றது ஆனால் நாம் அனைவரும் நாமளா அரசுக்கு வரி செலுத்துகின்றோம் என்று இலவசம் என்றல் வாயா பிளந்துகிண்டு போய் அதை வாங்க நிற்கின்றோம் ஆனால் அந்த இலவசம் நமக்கு பின் நாளில் அது பெரிய பிரச்சனையாக வரும் அது என்ன பிரச்னை என்று நமக்கு தெரியும் அது வேறு ஒன்றும்  அரசு நாம் செலுத்தும் வரியில் இருந்து  மக்களுக்கும் நாட்டிற்கும் உதவும் வகையில் எந்த ஒரு திடத்தையும் செய்யாமல்  அனைத்தையும் இலவசமாக கொடுப்பதால் அரசின் கஜான இந்த இலவச திட்டத்திற்கே பல கோடியே விழுங்கி விடுகிறது பின் அரசாங்க கஜான காலி ஆகி விடும் பின் அரசு என்ன செய்யும் இருக்கும் அனைத்தும் வரியையும் உயர்த்தும் வரி உயர்ந்தால் அனைத்தும் பொருள்களின் விளையும் உயரும் உயரும் என்ன உயரும் உயர்ந்து விட்டது இதை எல்லாம் அறியாமல் நம் மக்கள்  இன்னும்  இலவசம் இலவசம் என்று ஏமார்ந்து  கொண்டு இருக்கின்றனர்.

இதையே  இலவசம் இலவசம்  என்று சென்னையில் ஒரு துண்டு சிட்டு பெருசுரம் செய்ய பட்டது இந்த செய்தி அனைவரும் அறிந்து இருப்பிர்கள் அதில் உள்ள செய்தி என்னவென்றல்

இன்றைய தமிழகம்  என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா?  தமிழ்  நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது  மட்டுமா அரசு செய்யும் ஒவ்வறு கடன் தள்ளுபடி திட்டமும் இந்த இலவச திட்டத்தை போல தான் கடன் தள்ளுபடி  என்று இந்த அரசு அறிவித்தல் தான்  நம் இன்று அனைத்து பொருள்களின் விலையும் வின்னைதொடும் அளவிற்கு  உள்ளது .


ஆகா  இனி மேலாவது  இலவசம் என்று சொல்லும்  அரசை நம் மக்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம்  வேண்டாம்.

ஏழாம் அறிவு

 ஏழாம் அறிவு

 மனிதனின்  ஏழாம் அறிவாக  எப்பொழுதும்  இருபது  கடவுள் தான் இதை யாராலும் மறுக்க முடியாது
என்னதான் மனிதனை பல்வேறு விதமான நோய்கள் தாக்கினாலும் மனிதன் அதற்கு மருந்தை கண்டுபிடித்தாலும் அவனது அந்த அறிவு கடைசியா நினைப்பது கடவுள் ஏன் என்றல் மனிதன் எப்பொழுதும் தனது ஏழாவது அறிவாக கடவுளை நினைப்பதை கடவுளை வணங்குவதை கொண்டு உள்ளன் ஆனால் அந்த ஏழாவது அறிவாக மனிதன் அறிவிக்க இல்லை மனிதனை கட்டுபடுத்த ஒரு பொருளாக கடவுளை கொண்டுள்ளான் அதலால் தான் மனிதன் எப்பொழுதும் கடவுளை தன்னை விட ஒரு படி மேலே வைத்து உள்ளன்.

மனிதனுக்கு எந்த ஒரு கஷ்டமோ துக்கமோ சந்தோசமோ  அவன் அவனையே அறியாமல் நினைப்பது கடவுளை தான்.

கடவுள் இல்லை என்று சிலர் கூறுவதும் உண்டு அது அவர்களின் சுய சிந்தனையாக எப்போதும்  இருக்காது அவர்கள் சொல்வது  நான் பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என்று ஆனால் உண்மையில் அவர்களும் ஏதேனும் ஒரு கஷ்டமான நேரத்தில் அவர்களை  அறியாமல் கடவுளை நினைப்பது உண்டு இதை அவர்களின் உள்ள மனம் உணரும்.

மனிதனுக்கு எந்தோ ஒரு இன்பமோ துக்கமோ அவனின் குறையே எண்ணியே எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுகிறான் அது மனிதனின் உணர்வு ஒரு மனிதன்  எவ்வளவு பெரிய மன தைரியம் உள்ளவன் என்றலும் எந்த ஒரு கஷ்டத்திலும் அவனது மனது இயல்பாகவே  கடவுளை  தான் நினைக்கிறது இதை தான் மனிதனின் ஏழாவது  அறிவு என்று சொல்கிறேன்.

Tuesday, October 19, 2010

நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை

நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை 


என் நண்பனின் வலியுருதளுக்கு  இணங்க  நேற்று இரவு எந்திரன் படத்திற்கு சத்யம் திரை அரங்கிற்கு சென்றேன் என்னுடன் வந்த என் நண்பர்களில் நான் மட்டும் தான் அந்த படத்தை முதல் முறையாக பார்கிறேன் மற்றவர்கள் எல்லாம் இரெண்டாம் முன்றம் தடவை பார்கின்றனர்.

அனைவரும் பாராட்டிய எந்திரன் படத்தை நான் பார்க்காமல் சன் குழுமம் நம்மை ஏமாற்றி நம் தினசரி வாழ்வில் வரும் மற்ற படங்களை போல அல்லாமல் இந்த எந்திரன் பாடத்தை சன் குழுமம் நமக்குள் திணித்த இந்த பாடத்தை பற்றி பலரும் பாராட்டி விமர்சனம் வலை பூக்களில் எழுதி உள்ளனர் ஆனாலும் படம் பார்த்த பிறகு  என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்ய விரும்பி எழுதிகிரேன் விமர்சனம் என்றல் படத்தின் கதை இல்லை என்னேன்றல் பாடத்தை அனைவரும் பார்த்து இருபிர்கள் அதனால்  பாடத்தை பற்றி தான்.

எந்திரன் இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை ஷங்கர் எப்பொழுதும் மக்களின் பிரச்சனைகள் பற்றி ஒரு மைய கருத்தை வைத்து தான் இருக்கும் அவரின் சென்ற படமான சிவாஜியில் கூட அளவுக்கு அதிகமாக சொத்தை வெளி நாட்டிலும் பினாமி பெயரிலும் உள்ள சொத்தை அவர்களிடம் இருந்து பறித்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவர் அவரின் அனைத்து படங்களிலும் மக்களை பற்றி ஒரு மைய கருத்து இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு ரோபோவின் காதலை பற்றி அதுவும்  கிராபிக்ஸ் அனைத்தும் ஹாலிவூட் தரத்திற்கு என்று கூறி ஒரு சுட்டி டிவி ஜெட்டிக்ஸ்  என்று குழந்தைகளின் டிவிகளில் வருவது போன்றும் ராமநாராயணன் படத்தில் வருவது போன்றும் தான் உள்ளது .

படத்தை பற்றி சொல்லும் போது முதற் பாதியில் ரஜினி எந்திரனை உருவாக்கும் விதம் நல்ல உள்ளது. சந்தனமும் கருணாசும் அந்த ரோபோ உருவாகும் போது அவர்கள் செய்யும் காமடியும் பரவாயில்லை ஆனாலும் சந்தானம் கருணாசின் காமடி பெரிதாக ஏடு படவில்லை. அந்த ரோபோ உருவனதுக்கு பிறகு படம் போறது தெரியாமல் நல்ல இருக்கு அதிலும் ரோபோ செய்யும் காமடி நன்றாக உள்ளது அதிலும் ரோபோவிடம்  கொச்சி ஹனிபா செய்யும் காமடி மிகவும் நன்றாக உள்ளது மற்றும் ரோபோ செய்யும் சிறு சிறு காமடிகளும் மிகவும் நன்றாக உள்ளது படத்தின் முதற் பாதி ஷங்கரின் மற்ற பாடத்தை போன்று மிகவும் ஜாலியாக நன்றாக உள்ளது அதிலும் ரஜினி ரோபோவ நடிப்பில் வென்று உள்ளார் அவர் ரோபோவ பேசும் விதம் மிகவும் நன்றாக உள்ளது ரோபோவாக ரஜினி நடிப்பில் ஒரு படி மேலை சென்று விட்டார்.


ரோபோ பிரசவம் பார்ப்பது என்பது எல்லாம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படத்தின் இரெண்டாம் பாதியில் அதை எல்லாம் மிஞ்சும் வகையில் வருவதால் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அதிலும் ரோபோ போய் கொசுவை பிடிக்க சென்று அதனிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர இருக்கு.


ரெண்டாவது பாதியில் ஷங்கர் நம்மை சிறு குழந்தைகளாக மாற்றி சுட்டி டிவி ஜெட்டிக்ஸ் போன்ற சேனலில் வருவது போன்று கிராபிக்ஸ்  மயமாக  படத்தை மாற்றி விடுகிறார் அதிலும் எந்திரன் படம் இந்திய வரலாற்றில் தயாராகும் மிக பெரிய பட்ஜெட் படம் என்று கூறினார்கள் ஹாலிடவுட்   படத்திற்கு இணையான கிராபிக்ஸ் ஹாலி படத்தில் பணி செய்தவர்கள் தான் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் வேலை செய்தனர் என்று சொன்னார்கள் ஆனால் ரெண்டாம் பாதியில் நிறைய ரோபோ வரும் கட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் மிகவும் கேவலமா உள்ளது இந்த அளவுக்கு நிறைய பணம் ஹாலிவுட்  படத்தில் வேலை செய்தவர்களை ரமணரயணிடம் கொடுத்து இருந்தால் அவர் இந்த எந்திரன் பாடத்தை விட 100 மடங்கு கிராபிக்ஸ் இல் சிறந்த படத்தை கொடுத்து இருந்திருப்பர் .

ரோபோ ரஜினி வில்லனாக மாறியதும் படம் பார்க்கும் நம் அனைவர்க்கும் ஒரு வித எரிச்சல் வருகிறது மற்றவர்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு வந்தது அதிலும்  ரோபோ தனக்கு தானே உடனேய நிறைய ரோபோக்கள் செய்து கதாநாயகியை கடத்தி தனி ராஜ்யம் போல இருப்பது நல்ல இல்லை அதவும் நிறைய ரோபோகள் வரும் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது அதிலும் ரெண்டாம் பாதியில் அடுத்து அடுத்து பாடல் வருவது அலுப்பாக உள்ளது.

ரெண்டாம் பாதியில் ரோபோ ரஜினி மே மே என்று ஆடு போல கத்தி உண்மையான ரஜனிய கண்டுபிடிக்கும் காட்சி மட்டும் நன்றாக உள்ளது.

படத்தின் இறுதி காட்சிகளிலும் ரோபோ  ஐஸ்வர்யாவை கடுத்தும் போதும் ரோபோ சண்டை இடும் காட்சிகள் ரொம்ப போர் அதிலும் படத்தின் இறுதியில் ரோபோ பலவாரு மாறுவது கிராபிக்ஸ் இல் மிகவும் கேவலமாக உள்ளது ஹாலிவுட் அளவிற்கு ஷங்கர் முயற்சி செய்து உள்ளார் ஆனால் கட்சில் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது ஏதோ கார்ட்டூன் டிவி பார்ப்பது போன்று உள்ளது அது மட்டுமா எப்பட படம் முடியும் என்று உள்ளது.

மொத்தத்தில் எந்திரன் முதல் பாதி மட்டும் பார்க்கலாம்.

ரஹ்மானின் பாடல்களில் காதல் அணுக்கள் மற்றும் கிளிமஞ்சாரோ பாடல் மட்டும் மனதில் பதிகின்றன மற்ற பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை ரஹ்மான் ஷங்கர் ரஜினி இவர்களின் மற்ற பட பாடல்கள் அனைத்தும் மிக பெரிய ஹிட் ஆகும் ஆனால் இந்த படத்தில் அனைத்தும் பாடல்களும் மக்களிடம் பெரிதாக போய் சேர வில்லை படத்தின் பின்னணி இசையும் பெரிதாக சொல்லிகொள்ளும்படி இல்லை.

எந்திரனில் ஜொலிப்பது ரோபோ ரஜினியின் நடிப்பு மற்றும் சன் குடும்பத்திற்கு பண மழை தான்,

கண்டிப்பாக ஷங்கரின் கனவு படமாக எந்திரன் இருந்திருக்கும் அது சன் குழுமம் கைவசம் செல்லும் முன்பு ஆனால் ஷங்கர் நினைத்த எந்திரன் கண்டிப்பாக இந்த எந்திரன் படமாக இருக்காது இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை சன் குழும படம் இந்த படத்திற்கு அப்படி என்னதான் 200 கோடிக்கு செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை பாடலுக்கு தான் செலவு நம்மை போன்றவர்களை ஏமாந்து இந்த படத்தை பார்த்ததுதான் செலவு.

எந்திரன் சன் குழுமத்திற்கு அடித்த ஜாக்பாட்.......

Friday, October 15, 2010

வெற்றியும் தோல்வி

 வெற்றியும் தோல்வியும்


வெற்றி

வெற்றி எதிரியை மட்டும் சேர்க்கும்
ஒரு மிக பெரிய எதிரி

தோல்வி

தோல்வியின் தனிமையில் உற்ற நண்பர்களை
நமக்கு உரித்து கட்டும்
ஒரு உற்ற தோழன்  

மனிதனை அளிக்கும் இயற்கை

மனிதனை அளிக்கும் இயற்கை 



மனிதனுக்குள் எத்தனை விதமான அறிவுகள்  எத்தனை  இருகின்றது என்று மனிதனே மனிதனை பற்றி பலவித ஆராய்சிகள் செய்கின்றான் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ந்து  அதற்கு மருந்தும் கண்டு பிடிகின்ற்றான் ஆனால் உண்மைலே அந்த நோய்கள் ஏற்பட காரணமானவன் மனிதன் தான். ஒரு தவறு செய்ய்பவனும்மே மனிதன் அதை திருத்த நினைப்பதும் மனிதனே.

மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று சொல்கின்றனர் ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றல் இயற்கையை மீறி புதிய புதிய  கண்டுபிடிப்புகள் என்று மனிதன் இயற்கையை  மீறி  இயற்கையை வெல்ல ரொம்ப ஆர்வமாய் இருக்கிறான் ஆனால் இயற்கையை வென்றதாக மனிதர்கள் நினைகிறார்கள் ஆனால் கடைசியில் வெல்வது இயற்கை தான்.


நம்மை சுற்றி இருப்பவை இயற்கை அந்த இயற்கையே அடிப்படையாக வைத்தே மனிதன் அந்த காலத்தில் வாழ்ந்தான் ஆனால் காலம் செல்ல செல்ல மனிதன் அந்த இயற்கையே அளித்து மனிதனின் படைப்பை அடிபடையாக வைத்து வாழ அற்பித்தன் அதனால் தான் அந்தந இயற்கை அழிவு நமக்கு பல்வேறு நோய்கள் இயற்கை சீற்றங்கள் என்று பல மனிதனை அளிக்க நடக்கின்றது ஆனால் மனிதன் ஒவ்வரு அழிவின் போதும் அதை தடுப்பது எப்படி என்று நினைத்து இயற்கையே அளிப்பதை விடாமல் அதை தடுகின்றோம்  என்று கூறி புதிய புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து மேலும் அழிவை தேடி கொள்ளுகின்றோம்.

தினம்தோறும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வர வர அதனல் இயற்கை எப்படியும் ஒரு வகையில் அழிந்து கொண்டு இருக்கின்றது.

என்னதான் பலவிதமான அமைப்புகள் இயற்கையை காக்க வேண்டும்  என்று செயல் பட்டாலும்   உலக  வல்லரசு  நாடுகளும்  சேரி  உலக  வல்லரசு  ஆகா  துடிக்கும்  நாடுகளும் சேரி   தொழில் முன்னேற்றம் விஞ்ஞான முன்னேற்றம் விண்வெளியில் போய் மனிதன் வாழ போகிறான் என்று அதில் நாடுகளுக்கு இடையில் போட்டி என்று கூறி இயற்கையே அளித்து கொண்டு உள்ளனர்.

தொழில் முன்னேற்றம் என்று கூறி இருக்கும் விலை நிலங்களை எல்லாம் தொழிற் கூடங்களாக மாற்றி விவசாயத்தை உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு கொண்டு அழித்து கொண்டு இருக்கின்றனர் இது மட்டுமா தொழில் முன்னேற்றத்தால் எப்போலுவதும் முன்னேறுவது நகரங்கள் மட்டும் தான் நகரங்கள் முன்னேறுவதால் அங்கு தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசாயத்தை விட்டு விட்டு நகரத்தை நோக்கி வருகின்றனர் இதனால் விளைநிலம் வெறும் நிலமாக மாறுகின்றது இது தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது அவர்கள் விலை வெறும் நிலங்களை தொழிற் கூடங்களாக மாற்றுகின்றனர் இதனால் வரும் காலத்தில் மனிதன் தொழிற் தொழிற் என்று கூறி உண்பதற்கு உணவு இல்லாமல் மனித இனம் அழிவை நோக்கி செல்கின்றது .

மனிதன் புதிய புதிய கண்டு பிடிப்புகள் என்று கூறி உலகத்தை அளித்தது போதாது என்று உலகத்தை அளித்த பின் வாழ இடம் தேடி இப்பொழுது விண்வெளியில் இடம் தேடி கொண்டு இருக்கின்றன் . விண்வெளியில்  உண்மைலேயே மனிதர்கள் போல யாரேனும் அங்கு வாழ்ந்தால் பின் ஒரு நாள் அங்கு சென்ற மனிதன் அங்கும் புதிய கண்டுபிடிப்பு என்று அங்கு உள்ளவர்களையும் அழித்து விடுவான் இதை சொல்லாமல் மனிதன் சொல்லத்தான் விண்வெளியில் உள்ளவர்களை அளிப்பது போன்று ஒரு மிக பெரிய ஆங்கில படம் அவதாரை மனிதன் இப்பொழுதே எடுத்து விட்டான் போல அதனால் தான் அந்த படமும் நம்மிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு மிக பெரிய வெற்றி படமாக ஆனதோ.

ஏதோ எப்படியோ 2012 எப்போவோ  இந்த உலகம் மட்டும் அல்ல அழிவு என்று எங்கு எதில் ஏற்பட்டாலும் அது மனிதனால் மட்டும் தான் . 

Friday, October 8, 2010

ஜன்னல் ஓர சீட்டு

ஜன்னல்  ஓர  சீட்டு


ஜில் என  வீசும்  காற்று
திரு திருவென வேடிக்கை பார்க்கும் கண்கள்
கண்களை கொள்ளை அடிக்கும் பசுமை காட்சிகள்
மனதை மயக்கும் இதமான பாடல்
என்னையே மறந்து நான் பயணிக்க
அப்படி என்ன விசேஷ சக்தி உள்ளதோ
பலரை அந்த சீட்டுக்கு ஏங்க வைக்கிறது.....  

Wednesday, October 6, 2010

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முஷாரப் ஜாலியா சொல்லுறாரு

 இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முஷாரப் ஜாலியா சொல்லுறாரு

இன்று தினமலர் இன்னைய தளத்தில் ஒரு  செய்தி படித்தேன் பார்க்க பாகிஸ்தானியர்களுக்கு  உண்மையிலே ரொம்ப தான் தில்லுனு  தோனுச்சு ஏன்னு  கேளுங்க பாகிஸ்தான் முன்னால் அதிபர் லண்டனில் ஒரு  பேட்டில சொல்லிறுக்காறு  அவரு ஆட்சில இருக்கும் போது இந்தியாவில் நாசா வேலைகள் செய்ய திவிரவதிக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி கொடுத்தது என்று ஊர் அறிய பேட்டி கொடுக்குறாரு எப்பா உண்மைலே அவருக்கு ரொம்ப தில்லுதான் .

உலக நாட்டு தலைவர்கள் எல்லாம்  திவிரவாதத்தை ஒழிக்கணும்  என்று அந்த மாநாடு இந்த மாநாடு என்று கூடி  கூடி பேசி நல்ல பேட்டி தான் கொடுக்குறாங்க  அவங்க தலைவர இல்லை இந்தியாவில தீவிரவாதத்தை  வளர்க்க தீவிரவாதிகளுக்கு பணமும் பயிற்சியும் பாகிஸ்தான் அரசே கொடுக்குதுன்னு  பேட்டி கொடுகுகின்றரே  முஷாரப் இவர் அல்லவா தலைவர் .

Monday, October 4, 2010

எந்திரனும் கலைஞர் டிவியும்

எந்திரனும் கலைஞர்  டிவியும்


எந்திரன் உலக  வரலாற்றில்  மிக பெரிய  வெற்றி  தமிழ் சினிமாவில்  ஒரு  ஹாலிவுட் தரத்திற்கு  இணையான  படம்  உலகம்  முழுவதும்  வசூல் மழை உலகம்  முழுவதும் திரை அரங்குகளில்  மக்கள் வெள்ளம். தமிழ் திரை உலகமே இது வரை கண்டிராத  பிரமாண்ட திரை படம். உலகமே  எதிர் பார்த்த திரைப்படம் மிக பெரிய வெற்றி கண்டது. ஷங்கரின்   இயக்கம்  மிகவும்  அருமையாக உள்ளது  ரஜினியின் நடிப்பு  முன் எப்பொழுதும் உள்ளதை விட  அருமையாக உள்ளத அணைத்து விதங்களிலும் படம் மிக பெரிய வெற்றி உலகம் முழுவதும் வெற்றி வெற்றி வெற்றி ... 

என்னட எந்திரன்  பாடத்தை  எதிர்த்து  எழுதிய இவன  இப்படி  எழுதுகிறன என்று  நினைத்து விட்டிர்கள  இவைகளை போன்று தான் நாம் இப்பொழுது  அதிகம் படிக்கிறோம்  எங்கு பார்த்தாலும் எந்திரன் வெற்றி வெற்றி பிரமாண்ட வெற்றி உலகமே வியக்கும் வெற்றி இதன்  இப்ப யாருங்க  படம் வெற்றி இல்லைன்னு  சொன்னது .

எந்திரன் படமும்  எதிர்பார்த்தது போல மிக பெரிய வெற்றி தான்  ஒத்துகொள்கிறோம் ஆனால் எந்திரன் படம் தானே வெற்றி கண்டு  உள்ளது ஏதோ இந்திய அமெரிக்காவுடன்  போர்  செய்து  வென்றது  போல அல்லது  இந்தியாவில்  உள்ள அனைவர்க்கும் ஏதோ இந்த படத்தின் முலம் நல்லது  நடந்தது போல ஏன் அனைவரும்  எந்திரன் எந்திரன் என்று எந்திரன் புராணம் படுகின்றனர்.

இது வெறும் படம் தான் படம் என்பது நாம் பொழுதுபோக்கிற்கு  பார்ப்பது தான் ஆனால் இந்த பாடத்தை மக்கள் கொண்டாட வேண்டியதுதான்  ஆனாலும்  சிலர்   எந்திரன் என்ற  உலகத்திற்குள் முல்கிவிட்டனர். இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டியதுதான் ஆனால்  எதை பார்த்தாலும் எந்திரன் எதை படித்தாலும் எந்திரன் மக்களை ஏமாற்ற சன் நிறுவனம் தான் அதன் மீடியா முழுவதிலும் எப்போலுவதும் போட்டு கொண்டு இருகின்றனர்  அதை பார்த்து நாமும் ஏமாந்து கொண்டுதான் இருகின்றோம் பின்பு  ஏன் வலை பதிவு முழுவதும் அனைவரும் எந்திரனை பற்றியே  எழுதுகின்றனர் .

இதே இந்தியாவில் தான் உலகத்தில் உள்ள  70  நாடுகள் பங்குகொள்ளும் காமன் விழ்த்து போட்டிகள் நடகின்றது  அதில் நாட்டு அரசியல்வாதிகள் செய்த  ஊழல் என்னற்றது  அதை  பற்றி எல்லாம் யார் கவலை படுவார்கள்  நமக்கு முக்கியம் எந்திரன் தானே .

இப்படி நம் மக்கள்  எப்போலுவதும்  திரை உலகிற்கு மட்டும் முக்கியத்துவம்  கொடுப்பதால் தான் திரை உலகத்தில் உள்ளவர்கள்  மட்டுமே  நம்  தமிழகத்தை  ஆட்சி  செய்து வருகின்றனர்  அவர்கள் மட்டுமே  இன்னும் நம்மை ஆட்சி செய்ய  புதிது புதிதாக  பலர் வந்த  வண்ணம்   உள்ளனர்  நாமும்  அவர்களுக்கு சிகப்பு  கம்பளம்  விரித்து வரவேற்கின்றோம்  இந்த நிலை  என்று மாறும் . 


இது போல திரை உலகத்தினர்  ஆட்சி செய்வதால்தான் மக்கள்   அனைவருக்கும்  வாழ வழி உள்ளதோ இல்லையோ   கண்டிப்பாக  படம் பார்க்க வேண்டும்  என்று கலர் டிவி  கொடுகின்றது நம்  அரசு அதையும்  இது பெரிய  நாலா திடம் என்று மக்கள்  வரவேற்று   வாங்கி கொள்கின்றனர் ஏன்னா  நமக்கு  நல்ல சாப்பிடுவதற்கும்  நல்ல வாழ்வதற்கும்  நம் நாட்டை முன்னேற்றுவதற்கும் நம் அனைவர்க்கும் வேலை முக்கியம் இல்லை டிவி தான் முக்கியம் .  

இந்த  அரசு சினிமாவை பெரிதாக நினைத்தால் தான் இங்கு ஆட்சி செய்யும் குடும்பத்தினர்  அனைவரும் சினிமாவையே  முக்கிய தொழிலாக  கொண்டு உள்ளனர் ஏன் தமிழ் சினிமாவையும் அவர்கள் தான் ஆளுகின்றனர்.மக்கள் நாம் அதை கண்டு தான் சீக்கிரம் எமருகின்றோம் சினிமாவயே அனைவரின் ரோல் மாடலாக நினைக்கிறோம் .

திரை படம் நம் பொழுது போக்கிற்குத்தான் உள்ளது அதன் முலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை  சொல்லலாம் கருத்துகள் சொல்கின்றனர்  என்பதால்  அவர்களை பெரும் தலைவர்களாய் நாம் ஏற்க  முடியாது  ஏன் என்றல்  அந்த படத்தில் அவர்கள் அதில் வருமான  நடிக்க  மட்டுமே  செய்கின்றனர் .

இங்கு எனக்கு எந்திரன்  பாடத்தை பற்றி தப்பாக  சொல்லும் எண்ணம்  எதுவும் இல்லை  படம் நன்றாக உள்ளது என்று அனைவரும்   கூறுகின்றனர்  அதலால்  படம் பார்க்கலாம்  ஆனால் அந்த படத்தையே  பெரிதாக  நினைத்து நம் கொண்டாடுவது  சரியல்ல இந்த பாடத்தை போன்றே சிறிய அளவில் கதையில் இன்னும் இதை விட நன்றாக ஒரு புதுமுகமா அல்லது வேறொரு  நடிகரோ நடித்து இருந்தால் இப்படி கொண்டடுவிர்களா .

படம் என்பது நம் பொழுது போக்கிற்கு மட்டும் தான் ....

தனிமையிலே இனிமை காண முடியுமா

 தனிமையிலே  இனிமை காண முடியுமா 


எவன் ஒருவன்  தனிமையை வென்று 
இனிமை  அடைந்தானோ 
அவன் வாழ்வில் துன்பங்களை வென்று 
துன்பங்களையும் இன்பம்  ஆக்கி கொள்வோம்

தனிமையில் நாம் நம்மை பற்றி நாமே அலசி நாம்  செய்த அனைத்தையும் யோசித்து பார்த்தல் நாம் செய்த தவறை உணர்ந்தால் எப்பேர்பட்ட  துன்பத்தையும்  கஷ்டத்தையும்  எளிதில் வென்று  துன்பத்தை இன்பம் ஆக்கி கொள்ளும்  வல்லமை பெறுவோம்.  கிறுக்கல்கள்

Sunday, October 3, 2010

அவசரம்

 அவசரம்

அவரசம் நம் வாழ்வில் எப்பொழுதும் ஒரு அவசரம் இருந்து கொண்டே இருக்கும் . இந்த அவசரத்தினால் நம் இழந்தவை நிறைய இருக்கும் இழந்த பின்பு ஐயோ அவசர பட்டுட்டேன் டா என்று சொல்வது உண்டு.

இந்த அவசரத்தினால் நமக்கு டென்ஷன் தான் அதிகம் ஆகும் இதனால் நமக்கு பிரச்சனைகள் அதிகம் வரும் . காலையில் எழுந்து வேலைக்கோ கல்லுரிகோ எங்கயோ வெளிய போவதற்கோ விட்டில் இருந்து கிளம்பும்போது இருந்து நமக்கு அவசரம் தான் விட்டில் இருந்து அவசர அவசரமா கிளம்பி ஐயோ பஸ் போய்டும் சீக்கிரமா போய் பஸ் புடிகனும் இல்ல train பிடிக்கணும் சீக்கிரமா ஆபீஸ் போகணும்னு பைக்க வேகமா ஓட்டுறது என் நீங்க பார்த்து இருப்பிர்கள் அல்லது நிங்களும் செய்திர்பிர்கள் சிக்னல் முடியுறதுக்கு உள்ள வேகமா போறது  trainla இருந்து இறங்கி அடுத்த train பிடிக்க வேகமா போறதுன்னு காலையில் ஏன் நாள் முழுவதும் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் அவசரம் தான் முதல் இடம் பிடிக்கும் .

ஏதேனும் ஒரு பிரச்னை என்றல் கூட இந்த அவசரத்தினால் சிறு பிரச்னை கூட ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். பிரச்னை மட்டும் இல்ல சந்தசமான நிலையில் கூட
அந்த சந்தோஷத்தில் கூட ஒரு சிறு அவசரத்தால் அதுவும் மாறும் நிலை உருவாகும் .

காதலன் படத்தில் ஒரு வசனம் வரும்  சந்தோசம் ஆனாலும் துக்கம் ஆனாலும் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வச்சிக்கோ என்று அது 100 / 100   உண்மை.

எந்த ஒரு கஷ்டம் ஆனாலும் துக்கம் ஆனாலும் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வச்சிகிடோம்ன அது சந்தோசம்ன ரொம்ப பெரிய சந்தோசமா கிடைக்கும் பிரச்சனைய இருந்த அந்த 5 நிமிஷத்துல நமக்குள்ள ஒரு அமைதி கிடைக்கும் பொறுமையா இருப்போம் அந்த பிரச்சனைய எப்படி சரி பண்ணலாம்னு நமக்குள்ள ஒரு எண்ணம் வரும் இதனால அந்த பிரச்சனயும் சரி ஆகிடும் .

நம் தினசரி வாழ்வில் நாம் எப்பொழுதும் அவசர பட்டுகொண்டே இருகின்றோம் அந்த அவசரத்தை தவிர்த்து கொஞ்சம் நிதானமாக  பொறுமையாக அமைதியாக அணைத்து விசயங்களையும் கையாண்டால் நம் வாழ்விலும் மனதிலும் என்றும் வெற்றியும் ஒரு வித அமைதியும் சந்தோசமும் என்றும் நிலைத்து இருக்கும் .

Friday, October 1, 2010

எந்திரன் எந்திரன் எந்திரனை கண்டாலே ஒரே கடுப்பா வருது

எந்திரன் எந்திரன் எந்திரனை கண்டாலே ஒரே கடுப்பா வருது 


எங்கே பார்த்தாலும் எந்திரன் எங்கு திரும்பினாலும் எந்திரன் எண்ணப இது அது வெறும் படம் தானே ஒரு படத்துக்கு என் இவ்வளவு அர்பாட்டம்னு தெரியல .

மக்கள் மத்தியில் ஒரு படத்துக்கு என் இந்த பரபரபுன்னு தெரியல நாம் பொழுது போகிற்குதானே படம் பார்ப்பது ஆனா இந்த எந்திரன் படம் மாதிரி தெரியல உண்மைலே நம் மீது நமகே  பிடித்தாற்போல் திணிக்கபட்ட ஒரு வியாபாரம்  நம்மை ஏமாற்றி ஒரு படத்தை நம் மீது திணித்து பல கோடி கொள்ளை அடிக்க பட்டுஉள்ளது.

ஒரு நல்ல படம்ன அந்த படம் ரிலீஸ் ஆகி அந்த படம் நல்ல இருக்குனு அதை மக்கள் பார்த்து ஒருவர் மட்ட்ரவரிடம் சொல்லி பிரபலம் அடைய வேண்டும் ஆனால் இந்த படமோ ஒரு பெரிய இயக்குனர்  தயாரிப்பாளர் நடிகர் நடிகைன்னு எல்லாமே பெரிய ஆட்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு ஒரு கருத்து உள்ள படமா கொடுப்பார்கள் எவ்வளவு மக்களை ஏம்மாற்றி கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் இதற்கு அவர்கள் கையாளும் யுக்தி பிரமாண்டம் பிரமாண்டம் .

எந்திரன் படம் பார்கலைய பார்கலைய அது படம் தானே வேற ஒன்னும் இல்லையே
அத பாக்குறது என்னமோ பெரிய கெளரவம நினைகிரங்க பார்கலைன்னு சொன்ன இன்னும் நி பார்கலைய என்று ஏளனம பார்கிரங்கள் .

இந்த படம் பல சாதனை படைசிருச்சம் உலக நாடுகளில் பல திரை அரங்குகள் ரிலீஸ் ஆகி உள்ளதாம் என் தமிழ் நாட்டில் கிட்டதட்ட அனைத்து ஊர்களிலும் அனைத்து திரை அரங்குகளிலும் இந்த படம் தான் ரிலீஸ் ஆகி உள்ளது இதுவும் ஒரு வியாபார யுக்தி தான்
ஏன்னா மக்கள் அனைவர்கிட்டையும்  முதல் நாள் பார்க்கணும் என்று ஒரு மாயே உருவாக்கி எல்லாரும் முதல் வாரத்தில் பார்த்தல் வசூலில் சாதனை என்று காட்ட அணைத்து திரை அரங்கிலும் ரிலீஸ் செய்து உள்ளனர் இதனால் மாற்ற தமிழ் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி போகி உள்ளது இத மாற்ற படங்களையும் பாதித்து உள்ளது .

எனக்கு இந்த எந்திரனை கண்டாலே பிடிக்கவில்லை  அதனல்  டிக்கெட் கிடைத்தும் என் நண்பரை பார்க்க சொல்லிவிட்டேன் .

இனி நாம் யாரும் சன் டிவி அனைத்து டிவி களையும் பார்க்க முடியாது  வெறும் எந்திரன்  விளம்பரம் தான் வரும்  டிவில  மட்டும் இல்ல தினகரம் கும்குமம் தமிழ் முரசு என்று சன் நிறுவனங்களில்  எல்லாம் எந்திரன் தான் ஆனால் இந்த முறை நம் நாடு முழுவதும் உள்ள அணைத்து  மக்களும் ஏமாறுகின்றனர். 

எந்திரன் சன் நிறுவனத்திற்கு  பல கோடியை கொட்டி கொடுத்த  மந்திரன் .........

 ஒரு படத்திற்கு நம் மக்கள் இவ்வளவு ஏமாறுவதால் தான் நம்மை ஏமாற்றி இன்னும் சுயநலம் அடைகின்றனர் சிலர் .
    பல லட்சம் கோடி கோடியை ஒரே குடும்பம் சம்பாதித்து அப்படி என்னதான் செய்வார்கள் என்று தெரியவில்லை.

Tuesday, September 28, 2010

நீயா நானா

நீயா நானா

போன வாரம் நீயா நானா  பார்த்தேன் அதில் எனக்கு ரொம்ப பிடிச்சத இங்க உங்களோட பகிரந்துகிரன்.















Monday, September 27, 2010

அவளின் நினைவுகள்

அவளின் நினைவுகள் 

உயிர் அற்ற உடல் 
ஆனாலும் ஆவேன் 
தவிர 
அவளின் நினைவுகள் 
இன்றி 
என் உயிர் மனது இரண்டும் 
இருக்காது .... 

பேருந்து பயணம்

பேருந்து பயணம்

மனதில் எதாச்சும் கஷ்டமா இருந்துச்சுன  நான் செய்யறது  பஸ் ஏறி எங்கயாவது  பஸ்ல அப்படியே ரொம்ப தூரம் போறது. இந்த மாதிரி பஸ்ல போன நான் பலதார பட்ட மக்களை பார்க்கலாம் அந்த மாதரி பார்க்கும் போது நாம நம்ம கஷ்டத்த விட நிறைய பேர் நம்மை விட அதிக கஷ்டத்துல உள்ளதை பார்க்கலாம் அதை வைத்து நம்ம கஷ்டத்த பெரிசா நினைக்கமா இருக்கும் நம்ம மனசு.

அது மட்டும் நிறைய சந்தோசமா உள்ளவங்கள பார்க்கலாம் அந்த மாதிரி ஒரு பயணத்தின் பொழுது நம் மனது என்னதான் கஷ்டத்துல இருந்தாலும் சந்தோசமா உள்ளவங்கள பார்த்தல் நம் மனதும் அவர்கள் சந்தோசத்தை மனது அளவில் நினைத்து கஷ்டத்தை மறந்து  சந்தோஷ படும்.


என் ஒரு பயணத்தின் பொழுது  ஒரு நல்ல இளைய ராஜாவின்  பாடல்களோ இல்லை ரஹ்மான் பாடல்களோ ஏதோ ஒரு நல்ல பாடல்கள் கேட்டுகொண்டு சென்றல் நம் பயணிப்பதும் தெரியாது நம்மையே மறந்து நம் கவலைகளை மறந்து அந்த பாடலில் முழ்கி விடுவோம்.

ஒரு பஸ் பயணத்தின் போது நாம்  பல தரப்பட்ட மனிதர்களை  பார்க்கிறோம்  அவர்கள் செய்யும் செயல்கள் நம் என்னத்தை மற்றும் என் பஸ்சில் நடக்கும் சிறு சண்டை கூட  நம் என்னத்தை மாற்றும்.

 ஏன் பஸ்சில் போகும் போது நாம் எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு அது தாங்க வேடிக்கை பார்க்குறது வேடிக்கை பார்த்துகிடே போனாலும் நாம பார்க்குறது கூட நம் மனசு மாற்றும் .

கவலையுடன் பஸ்சில் ஏறுங்கள் பஸ்சில் இருந்து இறங்கும் போது கவலைய பஸ்சோடா
இறங்கும் போது இறக்கி விட்டுட்டு வாங்க.  

Sunday, September 26, 2010

எந்திரன் முன்பதிவு

எந்திரன் முன்பதிவு

எந்திரன் முன்பதிவு தொடங்கியது இதுக்கு என் இந்த  அரவரம்னு தெரியல எல்லா படம் போல அதுவும் படம் தானே என்னமோ அந்த படம் பார்கவில்லை என்றல் ஏதோ பெரிய குற்றம் போல நினைகிறார்கள் அதுவும் முதல் நாள் பார்த்தான்  கௌரவம்மா .

என்னுடைய நண்பர்கள்  சிலபேர்  சொலுரங்க எப்படியாச்சும் முதல் நாள் டிக்கெட் வாங்கணும் டா அவங்க நினைகிரங்க அந்த படத்த முதல் நாள் பார்த்தல் தான் கௌரவம்மா எங்க இதுலாம் ஒரு கௌரவமங்க ஏதோ அந்த படத்த முதல் நாள் பார்கவில்லை என்றல் குடி முழ்கி போவது போல எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்குனாலும் அதாவது ஒரு டிக்கெட்கு  1000  ரூபா குடா குடுத்து பார்க்கலாம்னு சொல்லுறாங்க.

இந்த மாதிரி பெரிய கம்பெனில வேலை பார்க்குற எல்லாரும் அந்த படத்த  முதல் நாள்  பார்க்குறத தான் நண்பர்களுக்கு கிடையே  கௌரவம்னு நினைகிரங்க .

உண்மையான நண்பர்களுக்கு கிடையே கெளரவமே கிடையாது என்று அவர்களுக்கு தெரியல.

Saturday, September 25, 2010

வாழ்கை பரிட்சை

வாழ்கை  பரிட்சை

கஷ்டம் என்னும் அனுபவ பாடத்தை
இஷ்டதுடன் ஏற்றல்
வாழ்கை என்னும் பரிட்சையில்
இறுதியில் வெற்றி நமதே!

Tuesday, September 21, 2010

நட்பு

 நட்பு

என்றும் திகட்டத இன்பம்
நட்பு
நம் வாழ்கையில் என்றும் கிடைக்கும் இன்பம்
நட்பு
அதுவே நமக்கு என்றும் திகட்டத இன்பம்
பேரின்பம்

நண்பேன் டா........  

Saturday, September 18, 2010

வழி

வழி

வலி
வலி தான்
வாழ்கையின் வெற்றிக்கு
வழி.....

Thursday, September 16, 2010

அழிவை நோக்கி செட்டிநாட்டு விடுகள்

அழிவை நோக்கி செட்டிநாட்டு விடுகள்

செட்டிநாட்டு விடுகள் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது காரைக்குடி அந்த காரைக்குடிய சுத்தி நிறைய செட்டிநாட்டு ஊர்கள் இருக்கு அதுலு ஒன்னுதான்  தேவகோட்டை அந்த தேவகோட்டைல பிறந்து வளந்தவன் தான் நான் அதனால செட்டிநாட்டு விட்ட பத்தி எழுதனும்னு நினச்சேன் ஆன அது சாதாரன விஷயம் இல்லை.

செட்டிநாட்டு விடுலாம் இன்னும் கொஞ்சம் வருடத்தில் அங்கயும் பார்க்க முடியாம போகும் ஒரு மிக பெரிய அழிவில் அவை சிக்கி உள்ளன.

செட்டிநாட்டு விடுன அது ரொம்ப பெருசா இருக்கும் ரொம்ப பெரிய அரண்மனை போல இருக்கும் அரண்மனை போல என்ன  அது அரண்மனை தான்  அந்த விட்டுக்குள ஒரு திருடன் போய்ட்டன அவன் அந்த விட்டுகுள்ள தங்கி இருந்தே திருடலாம் என்ன அவ்வளவு பெரிய விடு .

வெறும் பெரிய விடு மட்டும் இல்ல அந்த விடு வேலை பாடுகள பார்த்த பிரமிச்சு போய் நிப்போம் விடு முழுக்க அழகிய சிற்ப வேலை பாடுகள் பலுங்கி கண்ணாடிகள் இத்தாலி பிரேசில் போன்ற வெளிநாட்டு கண்ணாடிகள் அனைத்தும் .

விடு கட்டினது முழுக்க முட்டை கருவும் சுண்ணாம்பும் தான் என்ன தான் வெள்ளம் மழை வந்தாலும் தண்ணிர் விட்டு உள்ளே போகாது என்ன விட்டிற்கு கிலே முழுவதும் பெரிய பெரிய கரும் கற்கள் போட்டு அடித்தாலும் 5  அடி வரைக்கும் அடித்தளத்தை  மேல் எழுப்பி விடு கட்டி இருப்பார்கள் . வெளிய எவ்வளவு வெயில் அடித்தாலும் விட்டிற்கு சென்றல் அவ்வளவு குழு குழு என்று இருக்கும்.

விடு முழுக்கு தேக்கு மரம் கொண்ட மர வேலை பாடுகள் இருக்கும் மர அனைத்தும் பர்மா தேக்கு தான்.

இப்படி அந்த செட்டிநாட்டு விட்டை பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இப்படி பட்ட வீட்டை பார்க்க வெளிநாட்டில் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டுதான் இருகிறார்கள்.

ஆனால் அப்படி பட்ட செட்டிநாட்டு விட்டின் இன்றைய நிலைமை மிகவும் மோசம்
தேக்கு மரத்து காகவும் அதில் உள்ள பளிங்கிகாகவும் நிறைய பணம் கிடைகின்றது  என்றும் அவற்றை இடித்து தரை மட்டம் ஆக்குகின்றனர் .

செட்டிநாட்டு பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த அளவே விடுகள் உள்ளன .

அந்த விட்டில் அதிகம் யாரும் இப்பொழுது வாழ்வது இல்லை ஏதேனும் விஷேய்சன்களுக்கு மட்டும் தான் வருவார்கள் அதுவும் எப்பொழுதாவது தான் அதனால் அவர்கள் அந்த வீட்டை விற்கின்றனர்.மற்றும் ஒரு விட்டிற்கு 10 முதல் 50 பேர் வரைக்கும் பங்கு உண்டு அதனாலும் விற்கின்றனர்.

விட்டை வாங்குபவர் 2 கோடிக்கு வாங்கினால் அந்த விட்டை இடித்து அதில் உள்ள தேக்கு மற்றும் பல விலை மதிக்க முடியாது பொருளை விற்றல் அது  5 கோடி கூட வரும் அது மட்டும் இல்லாமல் ஒரு விட்டை இடித்தல்  அதில் 10  விடு கட்டும் இடமும் கிடைக்கும் இதனால் செட்டிநாட்டு விட்டை இடித்து தரை மட்டம் ஆக்குகின்றனர் .
என்னதான் நாம் விண்ணை பிளக்கும் மிக பெரிய கட்டிடங்கள் காட்டினாலும் செட்டிநாட்டு விடு ஓன்று நம்மால் திரும்ப கட்ட முடியுமா .

இடித்த ஒவ்வரு  விட்டையும் எங்க ஊர்ல பார்க்கும் போது மனது ஒரு நிமிஷம் கலங்குது பணம் இருந்த நாம இந்த விட்டை வாங்கி பத்திரமா அழகு படுத்தி வச்சு இருந்திருக்கலாம் என்று தோணும் .

நம்ம  அரசாங்கம் இந்த மாதிரி விட்ட இடிக்கமா பாதுகாக்க  எதாச்சும் பண்ணலாம் ....

மனித முடங்கி போகதே

மனித முடங்கி போகதே  

முடிந்ததை நினைத்து
முடங்கி போகாதே
தினமும் பூக்கும் பூவாய்
தினமும் புத்து
தினமும் புதியதாய்
புது புது எண்ணங்களை மனதில்
எண்ணி
தினமும் புதிய மனிதனாய் பிறந்து
புதிய வாழ்கை வாழ்வாய்.......

Thursday, September 2, 2010

இனி உங்களை உற்சாக படுத்த போறான் இந்த எந்திரன்

 இனி உங்களை உற்சாக படுத்த போறான் இந்த எந்திரன்

இனி என் வலையில் உங்களை  போர் அடிக்கும் என் வாழ்கை  சம்பவம் ஏதும் இருக்காது மனதிற்கு சந்தோஷமான நல்ல விஷயங்கள் என் கவிதைகள் அரசியல் விமர்சனம் திரைபட விமர்சனம்  மனதிற்கு அமைதியை  தருபவை மட்டும் தான்.........


உங்கள் எந்திரன்........

எந்திர மனிதன் Format செய்த புதிய மனிதனாக

 எந்திர மனிதன் Format  செய்த புதிய மனிதனாக


என்னையும்  என் மனதையும் முழுமையாக மாற்றி கொண்டு ஒரு புதிய நிம்மதியான வாழ்கையை நோக்கி சந்தோசமாக என் புதிய மனதுடன் இன்று முதல் .....

எல்லாம் நன்மைகே .............
என்று எந்திர மனிதன் இன்றுமுதல்.............

வாழ்கை வேதனையுடன் போகிறது

வாழ்கை  வேதனையுடன் போகிறது

என் வாழ்கை வேதனையுடன் போகிறதா  மனது  ஒரு அமைதியை தேடுகிறது பேருந்தில் பயணிக்கும் போது மனது அந்த அமைதியை அடைகிறது  என் வாழ்கையில் நடக்கும் சம்பவம் வேர் யார் வாழ்விலும் நடக்க கூடாது..

எனக்கு என்று ஒரு நல்ல வாழ்கை இருபதாக என் நண்பர்கள்  கூருகின்ற்றனர் அவர்கள் தான் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் ........


காதல் தோற்று விடும் நட்பு என்றும் தோற்காது ........

Monday, August 30, 2010

நான் மகான் அல்ல செய்த மாற்றங்கள்

நான் மகான் அல்ல  செய்த மாற்றங்கள்

நான் மகான் அல்ல படம் பார்த்தேன் ரொம்ப நல்ல படம். இரெண்டே கால் மணி நேரம் ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம். சென்னைல ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்த எதார்த்தமா காமிச்சு இருக்காறு அதே மாதிரி சென்னை லோக்கல் கல்லூரி பசங்க எப்படி இருபங்கனு நல்ல காமிச்சு இருக்காறு.

படத்துல எனக்கு படம் ஆரம்பிச்சதும் கார்த்தி பன்னுரதுலம் ரொம்ப பிடிச்சு இருக்கு அதுலயும் கார்த்தி தான் ஒரு லவ் failurenu  சொல்லி அதுக்கு அவர் சொல்லும் விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.

வாழ்க்கைல ஒரு லைப் நம்மள விட்டு போச்சுன அதை விட ஒரு brightana  லைப் நம்மள தேடி வருதுன்னு அர்த்தம்.

எப்பா என்ன  ஒரு வசனம் என் வாழ்கைக்கு   ஏற்ற  ஒரு  வசனம் ........

இந்த வசனம் தான் என்ன கொஞ்சம் கொஞ்சமாக மற்றலம்னு பாக்குது ஆன என் மனசு  மாறல....
அதுலயும் முக்கியமா அந்த வா வா நிலவ பிடிச்சு தரவ பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அதுல உள்ள பாடல் வரிகள் மனசுக்கு ரொம்ப அறுதல நல்ல இருக்கு........ 

Monday, August 16, 2010

ரெக்கை கட்டி பறக்க

 ரெக்கை கட்டி பறக்க

தினசரி   நம்மை  சுற்றி  எவ்வளவோ  நடக்குது  நாமும் எவ்வளவோ வேலை செய்யுறோம் ஆனா நைட்  சாப்பிட்டு விட்டு நல்லாத்தான் தூங்க போரம் ஆனா சிலபேருக்கு படுத்தும் தூக்கம் வராது எதாச்சும் ஒரு வேலை நாளைக்கு செய்ய வேண்டி இருக்கும் இல்லை இன்னைக்கு செஞ்ச வேலை  எதாச்சும் தப்பா பண்ணி இருப்போம் இல்லைனா எதயாவது பற்றி யோசிசுகிடேஇருப்போம் ஒரு நல்ல தூக்கம் உடனே வராது. நாமும் அங்குட்டு இங்குட்டு பிரண்டு பிரண்டு படுத்து பார்போம் ஆனா தூக்கமே வராது அப்படி இப்படின்னு எப்படியாவது தூகுன்னாலும்   அடுத்த நாள் நம்மால எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது மனசு எதையோ ஒன்னா இழந்த மாதிரியோ இல்ல தேடிகிட்டே இருக்கும் அதனால அந்த நாளும் நமக்கு நல்ல  இருக்காது .

ஆனா  தூங்க போறதுக்கு முன்னாடி டிவியா  OFF  பண்ண  உடனே போய் படுப்போம்
படுக்க போறதுக்கு  முன்னாடி கடைசி நிமிஷம் வரைக்கும் டிவி பார்போம் இதுவே நம்ம
தூக்கத்த கெடுக்கற ஒரு பெரிய விஷயம் ஏன்னா டிவில என்ன பார்த்துட்டு வந்தோமோ
அதே நம்ம மனசுல ஓடிகிட்டே இருக்கும் தூக்கத்தையும்  கெடுக்கும்.

கொஞ்சம் நேரம் மனசு விட்டு  யாரு கூடவாச்சும் பேசுங்க  உங்க மனசுல உள்ள கவலைய  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்க மன பரத்தை குறைக்கும்.

அத விட ஒன்னு செஞ்சக  மனசு அப்படியே  ரெக்கை கட்டி பரந்த மாதிரி  உங்கள அறியாம தூங்கிவிடுவிங்க  அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க FM கேளுங்க
இல்லை மனதிற்கு இதமான  இளையராஜா பாடல்கள் கேளுங்க அதிலும் FM  கேளுங்க
ஏன்னா அதில் அவர்கள் இதமாக பேசும் விதம் அதில் வரும் பாடல்கள் ஆனைத்தும்
நம் மனதை இதமாக்கி நம்மை தலாட்டும் அதில் வரும் மெல்லிசை பாடல்கள் இளையராஜா பாடல்கள் பழைய பாடல்கள் என ஆனைத்தும் நம்மை மெய் மறக்கவைக்கும்  அப்படியே வனத்தில் ரெக்கை கட்டி பறந்து நம்மை அறியாமல் நன்று
தூங்கிவிடுவோம் அடுத்த நாள் நம் மனதும் மிகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும்
அன்றைய தினம் மிக நன்றாக இருக்கும் .....

என்ன நிங்களும் ரெக்கை கட்டி பறக்க  தயாரா .........

Sunday, August 15, 2010

காதலின் ஏக்கம்

காதலின் ஏக்கம்

என் இதயம் துடித்ததோ இல்லையோ
அதை விட அதிகம் உன்னை நினைத்தது
உன் பாசத்தை நினைத்து
உன் அன்பின் அரவனைபிற்கு ஏங்கி ஏங்கி
உன்னை நினைத்தே துடித்தது ........

காதலின் சண்டை

 காதலின் சண்டை

சண்டை போட்டு பிரிந்தோம்
அந்த சண்டையே
உன்னை அதிகம் நினைக்க வைத்தது
என் மனம் உன்னை எந்நேரமும்  நினைத்தது
என் காதல் இன்னும் பெருக்கு எடுத்தது
எங்கு பார்த்தாலும் நீயே
நான் சுவாசிக்கும் மூச்சாய் வந்து
என் உயிராய்  இருந்தாய்
இந்த சண்டையால்
நம் காதலின் உன்னத அன்பு
நமக்கு புரிந்து உள்ளது .....

நேற்று எந்திர மனிதன்

 நேற்று எந்திர மனிதன்

நேற்று  பெரிதாக ஒன்றும் செய்யவில்லை    ரூமில் தூங்கி ரெஸ்ட் தான் எடுத்தேன்
என்னமோ டெய்லி வேலைக்கு போற மாதிரி சண்டே மட்டும் ரெஸ்ட் இல்லங்க தினசரி அதன் வேலை நானும் எவளவோ வேலை தேடிரேன்  ஆனா கிடைக்கல.


எங்க விட்ல போய் எங்க விட்ல மட்டும் இல்லங்க  ஆனைத்து விட்லயும் என செயவ்ங்க
போய் ஜோசியரிடம் ஜாதகம் பார்பாங்க அதன் தான் எங்க விட்லயும் செஞ்சாங்க
ஜோசியரு சொன்னாரம் எனக்கு 7 1/2  சனியம் அதன் இன்னும் 6   மாசத்துக்கு கிடைக்காதம்.


என்ன கொடுமை சார் படிச்சா வேலை கிடைக்காதம்  சனி போனதம் கிடைக்குமாம் ....

முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினர்

முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினர்

முதல்வர் கோட்டையில்  கொடி ஏற்றி  சுதந்திர தினத்தை  கொண்டாடினர்

முதல அவரால  எந்துருச்சு  நிக்க முடியுமா  இன்னும் எத்தன நாள் தான்பா இவரு குடும்பம் ஆட்சி செய்யும் .படத்த நல்ல பாருங்க  பக்கதுல ஒருத்தர் இவர தங்கி புடிச்சு இருக்காறு. ஒருத்தர் நல்ல  எந்துருச்சு நிக்க  குட முடியல அவரு எப்படிபா  நாட்டை ஆட்சி
செய்வாரு.

இவரு ஆட்சி செஞ்சு கிளுச்சது போதும் .

நேற்று திருச்சில ஜெயலலிதா  பேசினது என்னமோ அரசியலுகாக பேசினாங்க  ஆனா அதுல எத்தன உண்மைகள் தன் குடும்ப  சுயநலத்திற்கு  மட்டும் ஆட்சி செய்கிறார் .

தமிழ்நாட்டுல அவரு குடும்பம் மட்டும் தான்  இருக்குனு நினைசுட்டாறு போல அதன்
அவரு குடும்பத்துல எல்லாரும் ஒரு பதவில இருகாங்க .

ஜெயலலிதா சொன்னதுல எனக்கு பிடித்தவை .

உலக நாடுகளில்  எங்கு வேணாலும் சென்று பாருங்கள் அல்லது இங்கு நடப்பது போல எங்கு இருக்க என்று  அதாவது
 அப்பா முதல்வர்
மகன்  துணை முதல்வர்  இன்னொரு மகன் மத்திய அமைச்சர்  பேரன் மத்திய அமைச்சர்
மகள் நாடாளும் மன்ற உறுப்பினர்  மகளின் மனம் கவர்தவர்  மத்திய அமைச்சர் .

என்ன கொடுமை சார் இது ....
 இதைவிட  பெரிய கொடுமை  தென் இந்தியாவில் மீடியா  எல்ல மீடியாவும்  அதாவது  டிவி  ரேடியோ டெய்லி பேப்பர்  வரபுத்தகம்  ஏன் DTH  சினிமா விநியோகஸ்த்தர்   என எல்லாமே அவங்க தான் .

நடக்குறது  செய்திய இல்லை அவங்க  நினைக்குறது தான்  செய்தியா.........

Saturday, August 14, 2010

வம்சம் திரைப்பட விமர்சனம்

வம்சம் திரைப்பட விமர்சனம்

வம்சம் பெயருக்கு ஏற்ற கதையும் நடிகர்களும் ஹீரோவை தவிர. கஞ்சா கருப்புவின்  காமெடி பரவ இல்ல. இயக்குனர் பண்டிரஜ்கு இது ரெண்டாவது படம் பசங்க படத்திற்கு கிடைத்த பெயர் இதில் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் .

வம்சம் ரெண்டு ஊரில் உள்ள தேவர் இன மக்களின் பாரம்பரியம் பற்றிய கதை .அந்த ஊரில் வாழும் ஒவ்வரு   குடும்பத்திற்கும் ஒரு வம்ச பெயர் உண்டு அந்த ஊர் திருவிழாவில் கதை தொடங்குகிறது ஒவ்வரு வம்சமும் கட்டாயம் எங்கு இருந்தாலும் அந்த திருவிழாவுக்கு  வந்து கலந்து  கொள்வார்கள்  மொத்தம் 15 நாள் திருவிழா நடக்கும் அந்த நாட்களில் கருவறுக்கருது அதாவது ஒவ்வரு வம்சமும் தங்களின் எதிரியை திட்டமிட்டு கொலை செய்வது . அந்த திருவிழா நாளில் இறக்கும் அந்த நபரை  முறை படி  அடக்கம்  செய்ய கூடாது  அவரை ஒரு கட்டில் வைத்து எடுத்து சென்று  ஒரு அனாதை பிணம் போல எரித்து விடுவார்கள்  இது அந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய அவமானம் அந்த திருவிழாவில்  இறுதி நாள் அன்று ஒவ்வரு வம்சைத்த சார்ந்த  அனைவரும் வந்து தங்களது கலஞ்சு வங்கி செல்வர்கள் இதில் மற்ற அணைத்து வம்சத்தில் நிறைய வாரிசுகள் ஆனால் அன்பரசு அதாவது படத்தின் ஹீரோவின்  வம்சத்தில் மட்டும் அவர் ஒருவர் மடும் தான் வாரிசு இப்படி தொடகுகிறது கதை.

அன்பரசுவும் அவரது அம்மாவும்  ஊருக்கு வெளியில் அமைதியாக வாழ்கிறார்கள்
அன்பரசுவின் அப்ப ஒரு ரவுடியாக வாழ்ந்தவர் அதனால் அன்பர்சுவிற்கு அவரது அம்மா
எந்த பிரச்சனைக்கும் போக கூடாது என்று வளர்த்து வருகிறார். அது போல  அவரும் அப்பாவின் எதிரிகள் அவரை வெட்ட வரும் பொது சண்டை போடாமல் ஓடி தப்பிக்கிறார்
அவரை சீனி கண்ணு அதாவது  ஜெயப்ரகாஷ் படத்தின் வில்லன் காப்ற்றுகிறார் .

அன்பரசுவின் பக்கத்துக்கு ஊர் மலரை காதலிக்கிறார் அவரது அப்பாவை சீனி கண்ணு  ஊர் திருவிழாவில் கொன்று விடுகிறார் இதனால் மலர் அவரை ஊர் முச்சந்தியில்  வைத்து சனியை கரைத்து ஊற்றி துடைப்பதால்  அடித்து  அவமான படுத்திகிறார். இதனால் மலர் மேல சனி கரைத்து ஊற்றி அவரது முடியை வெட்டி  அவளை   அவமான  படுத்த சீனி கண்ணு  அவரது மகனை  அனுப்புகிறார்.

 அன்பரசுவும் மலரும்  தனிமையில் இருக்கும் பொழுது  மறுத்து அவரது  ஆட்களும் சூழ்ந்து கொள்கிறார்கள் அப்பொழுது அன்பரசு அவர்களை அடித்து மலரை காப்பாற்றுகிறார் இதனால் அவருக்கும்  சீனி கன்னுவிற்கும் மோதல் ஏற்படுகிறது இதனால் அன்பரசுவிற்கும் மலரின் kadhalirku piraachanai yerpadikirathu  . பின்பு தான் அன்பரசுவின் அப்பாவை கொன்றது சீனி கண்ணு தான் என்று அவரது அம்மா கூறுகிறார்.
 

சீனி கண்ணு அன்பரசுவை திருவிழாவில் கொள்ள சொல்கிறார்
ஆனால் அவர்களால் கொள்ள முடியவில்லை இதற்கு இடையில் சீனி கண்ணு வெட்ட படுகிறார் அவரை வெட்டியது அன்பரசு தான் என்று மருது அன்பரசுவை  கொள்ள வருகிறார்  ஆனால் அன்பரசுவின் அம்மா அவரை தடுக்கிறார் பின்பு அன்பரசு மருதை எதிர்த்து சண்டை போட்டு
வென்று மலரை கல்யாணம் பண்ணி தனது வம்சத்தை வளர்கிறார் .

இது தான் கதை .


அன்பரசுவின் அப்பாவாக கிஷோரும்  சீனி கன்னுவாக ஜெய பிரகாஷும் வாழ்ந்து இருகிறார்கள்.
அன்பரசுவின் நடிப்பு அப்படி ஒன்றும் இல்லை சுனைன  நடிப்பில் வென்று விட்டார் .




பாடல்கள் அனைத்தும் சூப்பர்
மொத்தத்தில் படம் ஒரு தடவை பார்க்கலாம் சுமார்.

Friday, August 13, 2010

பெண்ணின் காதல்

 பெண்ணின் காதல்

பெண்ணின் காதல்
ஒரு போலி வேடம்
அவளின் ஒரு சுயநல செயல்
அதில் ஆண் ஏமாந்து
வலியை பரிசாய் பெறுகிறான் .......

நேற்று எந்திர மனிதன்

 நேற்று எந்திர மனிதன்

நேற்று என் வாழ்வில் ஒரு மிக முக்கியமான நாள் .
ஏன் ஒரு மிக பெரிய திருப்பம்
அது காதலை ஒழித்து
நட்பு வென்ற தினம் ...  

நண்பர்கள்

நண்பர்கள்

என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்
நண்பர்கள் உயிர் தோழர்கள் மட்டும் அல்ல
வெற்று உடம்புக்கு உயிராய் இருப்பவர்கள் .
நண்பன் இல்லாத வாழ்கை
காற்று இல்லாத உலகம்
ஏன் அது உலகமே இல்லை .

அனைவரும் சொல்வார்கள்
காதல்  இல்லாத மனிதன் இல்லை
என்றும் காதல் இல்லாத உலகம் இல்லை என்றும்
ஆனால் காதல் இல்லாத மனிதனை பார்க்கலாம்
நட்பு இல்லாத மனிதன் உண்டா ய
ஏன் உயிரினம் உண்டா ........  

Wednesday, August 11, 2010

அம்மா


அம்மா
                                         " உணக்காக உனக்கு  உயிர் கொடுத்த  உயிரை
நி  வணங்கலாம்  ,
உன்னை காதலிக்கிறேன் என்று  உன்னை

கொள்ளும் உயிரை
 நி வணங்கலாமா ! !" 

மாநகர பேருந்தில் பகல் கொள்ளை

மாநகர பேருந்தில் பகல் கொள்ளை

சென்னை மக்களின்  நாடி துடிப்பு . அப்ப மாநகர  பேருந்தில் எத்தனை வகை .
Deluxe Blue Board  Bus
A/C Bus
Green Board Bus
White Board Bus
M Service Bus
அப்ப எத்தனை வகை . யாரு கேட்ட இத்தனை வகை பஸ்லாம் வெறும்  பஸ் போர்டு கலரையும் பஸ் படியையும் மத்திடு இது  Deluxe  Bus சொல்லி டிக்கெட் ரேட்ல பகல் கொள்ளை  அடிகிரங்க பேருக்கு தான்  Deluxe பஸ்னு பேரு அதுவும் இவ்வளவு பயணிகள்
தான் ஏறனும்னு ஒரு விதி வைத்து  இருந்தால் பரவில்லை எல்ல வண்டியும் போல தான்  இதுவும் இருக்கும் நிறைய பஸ்சும் இது தான் வரும் ஆனால் டிக்கெட் ரெண்டு மடங்கு அதிகம் இத்தனைக்கும் deluxe  பஸ்சுக்குள்ள நல்ல காத்தும் வராது நிறைய பயணிகள் நின்னுகிட்டு  போகவும் முடியாது யாரு கேட்ட இந்த பஸ்லாம் .

இதுவாச்சும் பரவில்ல M சர்வீஸ் பஸ்சும்  கிரீன் போர்டு பஸ்சும் பஸ் போர்டு கலர் மட்டும்  மாத்திட்டு அதுக்கு  அதிகம் காசு  வாங்குறாங்கல அத எங்க போய் சொல்லாறது

ஆனா இந்த A/C  பஸ் பரவில்லை காசு உள்ளவங்க நல்ல சொகுசா போகலாம் மத்தவங்க எங்க போறது .
 இந்த அரசு தான் மக்களை  காப்பாற்றுமா  அரசு.
 பேருந்து கட்டணம் உயரவில்லை என்று மட்டும் பேட்டி நல்ல கொடுபங்க .

 மக்களை  எப்படிலாம் ஏம்மாதலம்னு  புதுசு புதுசா  தினுசு தினுச ரூம் போட்டு யோசிபங்களோ............
 

எந்திர மனிதன் இன்று

 எந்திர மனிதன் இன்று 

இன்று நான் அந்த சாப்ட்வேர் கம்பனிக்கு  Interview சென்றேன் பெருங்குடியில் இருக்கும் அந்த கம்பெனி எப்ப எவளவு பெருசு அதுக்குள்ள எத்தன கமபனி இருக்கு எப்ப ரொம்ப பெரிசு  ஆனா எனக்குலாம் அது சரி வராது வாழ்க்கைலே முதல் முறைய  10 வது  மாடிக்கு போனேன் .

அங்க உள்ள போய் interview அட்டென் பண்ணேன் முதல் டெஸ்ட் கிளியர் பண்ணிட்டேன் ஆனா அடுத்த நேர்முக தேர்வில்  நீங்க படிச்சதுக்கு இதுக்கும்  சம்பதம் இல்ல அதனால்  வேலை  இல்லைன்னு அனுபிட்டாங்க
 அப்புறம் முக்கியமா சாப்ட்வேர் கம்பெனிலாம் ஒரு ஹை கிளாஸ் குகை தான்  உள்ள போய்ட்ட  வெளிய உலகமே அழிச்சலும் தெரியாது , ஒரு காற்று ஓட்டம் இருக்காது ஒரு
இயந்திர  ரோபோ வாழ்கை வேலை தான்.

காதல் கொசு


காதல் என்பது கரண்ட் இல்லாத
     டைம்ல வர கொசு மாதிரி  
          தூங்கவும்  முடியாது 
                  துரத்தவும்  முடியாது         

Tuesday, August 10, 2010

பெண்ணின் உடை

பெண்ணின் உடை

உடம்பை மறைக்கவே  உடை
இது நாகரிகம்
உடம்பை திறந்து காட்டவா உடை
இதுவா நாகரிகம்  

காமம்

 காமம்
 ஐந்து நிமிட சுகத்திற்கு
மனிதர்களிடம்  ஏன் இந்த வெறியாட்டம்
அதிலும் பெண்ணின் அங்கதை பார்க்க.......

எந்திர மனிதன் இன்று

 எந்திர மனிதன் இன்று

இன்று நான் என் நண்பர்கள்  ரூமிற்கு  சென்றேன் அங்கு எப்பொழுதும் போல நாளை எங்கு வேலை தேடு செல்லலாம் என்று பேசினோம் பிறகு மதியம் முட்டை  குழம்பு வைத்து சமைத்து சாப்டோம் .
 மாலை அங்கு இருந்து இன்னொரு நண்பர்கள் ரூமிற்கு வந்து நாளை ஒரு சாப்ட்வேர்  கம்பனிக்கு போகலாம் என்று முடிவு எடுத்து அதற்கு  அந்த சாப்ட்வேர் எனக்கு சொலி கொடுத்தார்கள் அவளவுதான்  இன்றைய பொழுது முடிந்தது .


ஆனால் இன்று என் மனதில் நிறைய  புது புது விஷயம் தோன்றியது அவைகள் விரைவில் இங்கு எழுத்து வடிவில் அதில் முக்கியமானவை  மக்களின் அன்றாட பிரச்சினைகள் .

ஒன்றை தேடி ஒன்றை தொலைத்தான்

 ஒன்றை தேடி ஒன்றை தொலைத்தான்

மனிதன் பணம் என்ற ஒன்றை தேடி
அவனது வாழ்வில் நிம்மதி சந்தோசம்
ஏன் அவன் வாழ்வே கூட தொலைத்துவிட்டான் ......... 

Monday, August 9, 2010

காதல் நஞ்சு

காதல்
 அளவுக்கு மிஞ்சினால்  அமிர்தமும்  நஞ்சு
 நாளாக  நாளாக  காதலும் நஞ்சு ....

வேலை தேடும் பொறியாளர்கள் ( Engineers )

வேலை தேடும்  பொறியாளர்கள்  ( Engineers )

இந்த வருடம் மட்டும்  பொறியியல் படிப்பில் சேர்த்தவர்கள்  1 லெட்சம் பேர்கள் .
ஆனால் படித்து முடித்து வேலை தேடுபவர்கள் எத்தன லெட்சம் பேர் என்று தெரியுமா அது பல  லெட்சம்  பேர்கள் நல்ல   வேலை கிடைத்தால்  அவனை  ஊர் பாராட்டும் அனால் வேலை கிடைகமல் வேலை தேடுபவனை அந்த ஊர் அவனுக்கு மனது அளவில் ஒரு இறுக்கத்தை தான் கொடுக்கும் .

வேலை தேடுபவன் படு ஓன்று என்றல்  சின்ன கம்பெனில வேலை  பார்ப்பவன் பாடு  ஆதை விட மோசம்
மற்றவர்கலம்  என்னட அவன்  மதம் 30000 சம்பாதிகிரண்   நி என்ன இன்னும் 6000 தான் சம்பாதிக்கிற என்று  கேவலமாக   பேசும் மக்கள். .
 mechanical படிச்சுட்டு  வேலை தேடுறது இருக்கே ஆதை விட வேற பெரிய கொடுமை கிடையாது .

சிப்காட்ல வேலை தேடறது  இருக்கே அது ஒரு பாத யாத்திரை வரிசய எல்லாம் கம்பெனி போய்  அங்க உள்ள வாட்ச்மன் கிட்ட இங்க வேலை இருகனு கேக்கணும். அவங்க கேட் உள்ளே விட மட்டாக தப்பி தவறி  ஒரு கம்பெனில  Resume   கொடுத்துட்டு போங்க  கால் பண்ணு  வாங்கனு  சொலுவாங்க.அது தான் அப்ப எங்களுக்கு பெரிய சந்தோசமா இருக்கும் .


                     இது போல இன்னும் நிறைய இருக்கு  அவை  தொடரும் .......... 

எந்திர மனிதன் இன்று

 எந்திர மனிதன்  இன்று வெட்டிய இணையத்தில்  பொழுதை கழித்தேன் வேற எங்கும் வேலையும்  தேட செல்லவில்லை

வெட்டியா எனது  ரூமில்  தான்  டிவியும்  இணையத்தில் தான் எனது வெடி வேலையாக   நண்பர்களுடன்  அரட்டை அடித்து கொண்டு இருந்தேன் .

எனது காதலி ( வருகால மனைவி ) கூட ரெண்டு நல  சண்டை அதன் முழுக்க அவள்  நினைப்பாகவே இருந்துச்சு   ஆனா நான் அவள் செல்லுக்கு    கால் பண்ண அவ அட்டென் பன்னால ஏன்ன நான் அவள ரொம்ப  கஷ்டபடிதுடேன்  அதன்.
           அது ரொம்ப கவலைய இருந்துசு எனக்கு .

Sunday, August 8, 2010

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் சுஜாதா பற்றி எங்கே



எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் சுஜாதா பற்றி எங்கே

சுஜாதா எந்திரனின் வசனகர்த்த.
 எந்திரன் இசை வெளியீட்டு விழாவில்  அந்த பெரிய இயக்குனர்  தயாரிப்பாளர்  இசைஅமைப்பாளர்  அப்புறம் அந்த பெரிய கதாநாயகர்  கதாநாயகி பற்றி தான் எல்லாரும் பேசினாங்க.

சுஜாதா தான் அந்த படத்துக்கு எந்திரன்  என்று தமிழில் பெயர் வைத்தவர் மற்றும் வசனம் எழுதி உள்ளார்  ஷங்கர்   ஒரு பெரிய இயக்குனர் அக அவர் ஒரு முக்கிய காரணம்.
ஆனா  அந்த இசை வெளியீட்டு விழாவில்  அவரை பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் பேசவில்லை.
                என்ன கொடுமை  சார்  இது .   

இது தான் ஷங்கர்   சுஜாதாவின்  மறைவிற்கு  செலுத்தும்  மரியாதை. 

நேற்று நான் முதல் முறையாக மாமல்லபுரம் சென்றேன்



நேற்று நான் முதல் முறையாக மாமல்லபுரம் சென்றேன்.  பைக்ல கார்ல இல்லைங்க பஸ்ல தான் அதுவும் வெறும் Rs 30  டிக்கெட்ல தாங்க என் வாழ்க்கைலே நேத்து தான் முதல் முறைய அங்க போனேன் ஆனா நான் சென்னை வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அனா நேத்து தான்  போக முடிச்சது ஆனா நான் மட்டும் போகல என் நண்பர்கள் மொத்தம் ௧௦ பேர் சேர்ந்து போனம் நாங்க கிளம்புன நேரம் 3 .30 அந்த 30 ரூபா டிக்கெட்ல தான் போகணும்னு அதானே மொத்தம் போகவர அதுவும் நாம சென்னை மாநகர் பேருந்தில் திருவன்மியுர்ல  இருந்து பஸ் ஏறி கோவளம் வரை ஒரு பஸ் கடைசி கோவளம் வரை பயங்கர கூட்டம்  நின்னுகிடே  தான்க போனம் நான் கோவளம் போறதும் அதன் முதல் முறை நான் மட்டும் இல்ல என் நண்பர்களில் 8 பேருக்கு அதன் முதல் முறை  ECR  போற வழி எல்லாம் பணக்காரர்கள் பொழுதுபோக வரும் நெறைய  இடம் அத்தைலம் பார்கவே பிரமிப்பாவும்  பயமாவும்  இருந்துச்சு என அங்க எல்லாம் மனசுக்கு உண்மையான சந்தோசம் கிடைக்காது வெறும் வெளி தோற்றம் மட்டும் தான் இருக்கும் கோவளம் வரைக்கும் பஸ்ல நாங்க பண்ண சேட்டை அப்படிலாம் ஒன்னும் பன்னால  கோவளம் போனோம் ஆனா போட் ஹவுஸ் போகல அங்க உள்ள  பீச்கு தான் போனம் போய் அங்க ஒன்னும்  இல்லைன்னு  தெருசுகிடோம் ஆனா காற்று  கொஞ்சம் நேரம் வாங்கிட்டு திரும்பவும் பஸ் ஏறி மாமல்லபுரம் போனம் போற வழில பேரூந்த போலீஸ் மறிச்சு நிருதினாக எதுக்க இருக்கும் யாராவது அமைச்சர்  போவாக  ஆதை மாதிரி 10 நிமிஷம் கழிச்சு மு.க.ஸ்டாலின் கார்ல சிட்ட பரந்தரு நான் மட்டும் முதல் அமைச்சர வந்தன அமைச்சர்லம் பஸ்ல தான் போகணும்னு சட்டம் கொண்டு வருவேன்  என்ன  அப்பதான் பஸ் டிக்கெட் ரேட் எவலவுனு அவகளுக்கு தெரியும் அதனால  மக்கள் எவ்வளவு கஷ்டம் படுரகனு தெரியும் முக்கியமா பஸ்சு என்ன வேகமா போகுதுன்னு தெரியும் . அப்பறம்  என்ன நாங்க அங்க போகும் பொது மணி 6  எல்லாரும்   அங்க இருந்து கிளம்புனாக  ஆனா  நாங்க அப்பதான்  அங்க போனம் அந்த கோட்டையா கொஞ்சம் பார்த்துட்டு அப்புறம்  மணி ஆகிடுச்சுனு  பாதுகாவலர் அங்க இருந்து போக சொல்லிடறு அப்புறம் கடற்கரை கோவில் பாக்கலாம்னு போனோம் ஆனா அதுவும் முடிட்டாங்க அப்புறம் என்ன வேற வழி இல்லாம கடற் அலைள கொஞ்சம் நேரம் விளையாடிட்டு அங்க ஒரு சின்ன இட்லி கடைல நைட் சாப்பாட்ட முடிச்சுட்டு கிளம்பிட்டோம் நைட் ரூம்  வர 10 மணி ஆகிடுச்சு . கடைசியா ஒன்னு நேற்று என் நண்பன் தமிழுக்கு பிறந்த நாள் அதனால தான் இந்த ஊர்  சுற்றல் .  

Saturday, August 7, 2010

முதலில் வலை பூவில் தமிழில் எழுத ரொம்ப கஷ்டபடுகிரேன்

முதலில் வலை  பூவில் தமிழில் எழுத ரொம்ப  கஷ்டபடுகிரேன்  எனது  தமிழில் பிழை  ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

ஆனந்தா விகடனில் என்னுடைய விருப்பமான எழுத்தாளர் திருமாவேலன்

ஆனந்தா விகடனில்  என்னுடைய  விருப்பமான எழுத்தாளர்  திருமாவேலன் 

  எப்பொழுதும் ஆனந்தா விகடனில் நான் விரும்பி படிப்பது திருமவேலனின்  கட்டுரைகள்  இந்தவாரம்  அவர்  இலங்கைக்கு  செல்ல விற்கும் தூதர் பற்றி அவர் எழுதிய  கருத்தகள்  ஆனைத்தும் உண்மை ஆதிலும் அவரது நண்பர் வரைந்த  ஓவியம் பற்றி கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட  வேண்டும்  இது வரை  இந்திர  காந்தி  காலத்தில் இருந்து இது வரைக்கும்  சென்ற தூதர்களை நிற்க வைத்து  அவர்களை பிடித்தே  நடந்து  சென்று விடலாம் என்று   குறிபிட்டு இருந்தார்  அதிலும் கருணாநிதி பிரதமற்கு கடிதம் எழுத்துவது என்றும் நடக்கும் ஒரு தொடர்கதை என்றும் செல்லும் தூதர் அங்கு சென்று ராஜா பக்ஷேய்விடம்  பரிசு பெற்று திரும்பவ்ரே தவிர அங்குள்ள  தமிழ் மக்களை பார்த்து
அவர்கள் படும் துன்பங்களையும் அவர்ககளுக்கு வேண்டிய அன்றாட உணவு தங்க வீடு
வருமானத்திற்கு வேலை பற்றியும் இந்திய கொடுத்த 500 கோடி நிதி உதவி  பற்றியும் ஆதை எப்படி செலவு செய்திர்கள் என்றும் துளியும் கேட்காது தூதற்கு அது ஒரு சுற்றுலாவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு புனியமும்  இல்லை  என்றும் இன்னும் நிறைய நல்ல எழுதி இருந்தார் ஆனைவரும் கண்டிப்பாக ஆதை படியுகள் . 

சிறு குழந்தையாக வலை பூவில் இன்று முதல் நான்

சிறு குழந்தையாக வலை பூவில் இன்று முதல் நானும் இங்கு கிறுக்க வந்து உள்ளேன்
 எந்திர மனிதன் என்றவுடன்  இது சூப்பர் ஸ்டார் ரஜனிய  பற்றிய வலை பூ  இல்லை ரஜினி மட்டும்  இல்லை  எந்திரன் நாம் அனைவரும்  தினமும் எந்திர வாழ்கை தான் வாழ்கிறோம் அதில் என் வாழ்கையும்  ஏன் அரசியல் சினிமா புதகம்கள்  மட்டும் அல்லது  என்னை சுற்றி நடதவை அதில் என் கருத்து  மற்றும் என் காதல் கதையை கிறுக்க போகின்றேன்
  
Related Posts with Thumbnails