Sunday, October 3, 2010

அவசரம்

 அவசரம்

அவரசம் நம் வாழ்வில் எப்பொழுதும் ஒரு அவசரம் இருந்து கொண்டே இருக்கும் . இந்த அவசரத்தினால் நம் இழந்தவை நிறைய இருக்கும் இழந்த பின்பு ஐயோ அவசர பட்டுட்டேன் டா என்று சொல்வது உண்டு.

இந்த அவசரத்தினால் நமக்கு டென்ஷன் தான் அதிகம் ஆகும் இதனால் நமக்கு பிரச்சனைகள் அதிகம் வரும் . காலையில் எழுந்து வேலைக்கோ கல்லுரிகோ எங்கயோ வெளிய போவதற்கோ விட்டில் இருந்து கிளம்பும்போது இருந்து நமக்கு அவசரம் தான் விட்டில் இருந்து அவசர அவசரமா கிளம்பி ஐயோ பஸ் போய்டும் சீக்கிரமா போய் பஸ் புடிகனும் இல்ல train பிடிக்கணும் சீக்கிரமா ஆபீஸ் போகணும்னு பைக்க வேகமா ஓட்டுறது என் நீங்க பார்த்து இருப்பிர்கள் அல்லது நிங்களும் செய்திர்பிர்கள் சிக்னல் முடியுறதுக்கு உள்ள வேகமா போறது  trainla இருந்து இறங்கி அடுத்த train பிடிக்க வேகமா போறதுன்னு காலையில் ஏன் நாள் முழுவதும் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் அவசரம் தான் முதல் இடம் பிடிக்கும் .

ஏதேனும் ஒரு பிரச்னை என்றல் கூட இந்த அவசரத்தினால் சிறு பிரச்னை கூட ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். பிரச்னை மட்டும் இல்ல சந்தசமான நிலையில் கூட
அந்த சந்தோஷத்தில் கூட ஒரு சிறு அவசரத்தால் அதுவும் மாறும் நிலை உருவாகும் .

காதலன் படத்தில் ஒரு வசனம் வரும்  சந்தோசம் ஆனாலும் துக்கம் ஆனாலும் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வச்சிக்கோ என்று அது 100 / 100   உண்மை.

எந்த ஒரு கஷ்டம் ஆனாலும் துக்கம் ஆனாலும் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வச்சிகிடோம்ன அது சந்தோசம்ன ரொம்ப பெரிய சந்தோசமா கிடைக்கும் பிரச்சனைய இருந்த அந்த 5 நிமிஷத்துல நமக்குள்ள ஒரு அமைதி கிடைக்கும் பொறுமையா இருப்போம் அந்த பிரச்சனைய எப்படி சரி பண்ணலாம்னு நமக்குள்ள ஒரு எண்ணம் வரும் இதனால அந்த பிரச்சனயும் சரி ஆகிடும் .

நம் தினசரி வாழ்வில் நாம் எப்பொழுதும் அவசர பட்டுகொண்டே இருகின்றோம் அந்த அவசரத்தை தவிர்த்து கொஞ்சம் நிதானமாக  பொறுமையாக அமைதியாக அணைத்து விசயங்களையும் கையாண்டால் நம் வாழ்விலும் மனதிலும் என்றும் வெற்றியும் ஒரு வித அமைதியும் சந்தோசமும் என்றும் நிலைத்து இருக்கும் .

2 comments:

  1. அன்பரே என் இடுகையில் உங்களுடைய கமெண்டை பார்த்தேன்...நானும் அஜித் ரசிகன் தான்.என்னுடைய BLOGல் உள்ள அசல் படத்தின் விமர்சனத்தை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும்.அவரை அரசியலில் இணைத்து எழுதுவது தவறு,நிச்சயம் அவர் அரசியலுக்கு பொறுத்தமில்லாதவர் என்பதை சற்று அழுத்தமாக கூறவே நான் சில தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.எந்த நடிகருடன் அரசியலை ஒப்பிடுவதாக இருந்தாலும் நான் இப்படித்தான் எழுதியிருப்பேன்...

    ReplyDelete
  2. அரசியலுக்கு எந்த நடிகரும் வரக்குடாது என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்.

    ReplyDelete

Related Posts with Thumbnails