Thursday, October 21, 2010

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்


இன்று சென்னை கே கே நகரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச கலர் டிவி கொடுக்கபட்டது இதில் விசேஷம் என்னவென்றல்  குடிசையில் வாழும் ஏழை மக்களும் சேரி பல கோடிக்கு சொந்தமான பணகரரும் சேரி அந்த இலவச கலர் டிவியா  வாங்க ஒரு வரிசையில் நின்னது தான்  இலவசம் என்றல் பிணமும் கூட வரும் போல அதாவது காசு என்றல் பிணம் கூட வாயா திறக்கும் என்ற சொல்வது போல இந்த அரசு இலவசம் இலவசம் அனைத்தும் இலவசம்  என்று கொடுத்து  நம் மக்களை நல்ல சோம்பேறி ஆக்கி உள்ளது.

டிவி வாங்க வந்த பணம் படைத்தவரிடம்  கேட்டதுக்கு அரசு இலவசமாய் கொடுப்பதை ஏன் விட வேண்டும் நங்கள் விட்டால் எங்களுக்கு உரிய டிவியை வேறு ஒருவர் பெற்று அதன் பலனை பெற்று விடுவர் என்று கூறுகின்றனர்.

உண்மையில் அரசாங்கம் நமக்கு தருவது இலவசம் அல்ல நாம் செலுத்தும்  வரி முலம் தான் அரசு நமக்கு இதை தருகின்றது ஆனால் நாம் அனைவரும் நாமளா அரசுக்கு வரி செலுத்துகின்றோம் என்று இலவசம் என்றல் வாயா பிளந்துகிண்டு போய் அதை வாங்க நிற்கின்றோம் ஆனால் அந்த இலவசம் நமக்கு பின் நாளில் அது பெரிய பிரச்சனையாக வரும் அது என்ன பிரச்னை என்று நமக்கு தெரியும் அது வேறு ஒன்றும்  அரசு நாம் செலுத்தும் வரியில் இருந்து  மக்களுக்கும் நாட்டிற்கும் உதவும் வகையில் எந்த ஒரு திடத்தையும் செய்யாமல்  அனைத்தையும் இலவசமாக கொடுப்பதால் அரசின் கஜான இந்த இலவச திட்டத்திற்கே பல கோடியே விழுங்கி விடுகிறது பின் அரசாங்க கஜான காலி ஆகி விடும் பின் அரசு என்ன செய்யும் இருக்கும் அனைத்தும் வரியையும் உயர்த்தும் வரி உயர்ந்தால் அனைத்தும் பொருள்களின் விளையும் உயரும் உயரும் என்ன உயரும் உயர்ந்து விட்டது இதை எல்லாம் அறியாமல் நம் மக்கள்  இன்னும்  இலவசம் இலவசம் என்று ஏமார்ந்து  கொண்டு இருக்கின்றனர்.

இதையே  இலவசம் இலவசம்  என்று சென்னையில் ஒரு துண்டு சிட்டு பெருசுரம் செய்ய பட்டது இந்த செய்தி அனைவரும் அறிந்து இருப்பிர்கள் அதில் உள்ள செய்தி என்னவென்றல்

இன்றைய தமிழகம்  என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா?  தமிழ்  நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது  மட்டுமா அரசு செய்யும் ஒவ்வறு கடன் தள்ளுபடி திட்டமும் இந்த இலவச திட்டத்தை போல தான் கடன் தள்ளுபடி  என்று இந்த அரசு அறிவித்தல் தான்  நம் இன்று அனைத்து பொருள்களின் விலையும் வின்னைதொடும் அளவிற்கு  உள்ளது .


ஆகா  இனி மேலாவது  இலவசம் என்று சொல்லும்  அரசை நம் மக்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம்  வேண்டாம்.

ஏழாம் அறிவு

 ஏழாம் அறிவு

 மனிதனின்  ஏழாம் அறிவாக  எப்பொழுதும்  இருபது  கடவுள் தான் இதை யாராலும் மறுக்க முடியாது
என்னதான் மனிதனை பல்வேறு விதமான நோய்கள் தாக்கினாலும் மனிதன் அதற்கு மருந்தை கண்டுபிடித்தாலும் அவனது அந்த அறிவு கடைசியா நினைப்பது கடவுள் ஏன் என்றல் மனிதன் எப்பொழுதும் தனது ஏழாவது அறிவாக கடவுளை நினைப்பதை கடவுளை வணங்குவதை கொண்டு உள்ளன் ஆனால் அந்த ஏழாவது அறிவாக மனிதன் அறிவிக்க இல்லை மனிதனை கட்டுபடுத்த ஒரு பொருளாக கடவுளை கொண்டுள்ளான் அதலால் தான் மனிதன் எப்பொழுதும் கடவுளை தன்னை விட ஒரு படி மேலே வைத்து உள்ளன்.

மனிதனுக்கு எந்த ஒரு கஷ்டமோ துக்கமோ சந்தோசமோ  அவன் அவனையே அறியாமல் நினைப்பது கடவுளை தான்.

கடவுள் இல்லை என்று சிலர் கூறுவதும் உண்டு அது அவர்களின் சுய சிந்தனையாக எப்போதும்  இருக்காது அவர்கள் சொல்வது  நான் பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என்று ஆனால் உண்மையில் அவர்களும் ஏதேனும் ஒரு கஷ்டமான நேரத்தில் அவர்களை  அறியாமல் கடவுளை நினைப்பது உண்டு இதை அவர்களின் உள்ள மனம் உணரும்.

மனிதனுக்கு எந்தோ ஒரு இன்பமோ துக்கமோ அவனின் குறையே எண்ணியே எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுகிறான் அது மனிதனின் உணர்வு ஒரு மனிதன்  எவ்வளவு பெரிய மன தைரியம் உள்ளவன் என்றலும் எந்த ஒரு கஷ்டத்திலும் அவனது மனது இயல்பாகவே  கடவுளை  தான் நினைக்கிறது இதை தான் மனிதனின் ஏழாவது  அறிவு என்று சொல்கிறேன்.

Tuesday, October 19, 2010

நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை

நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை 


என் நண்பனின் வலியுருதளுக்கு  இணங்க  நேற்று இரவு எந்திரன் படத்திற்கு சத்யம் திரை அரங்கிற்கு சென்றேன் என்னுடன் வந்த என் நண்பர்களில் நான் மட்டும் தான் அந்த படத்தை முதல் முறையாக பார்கிறேன் மற்றவர்கள் எல்லாம் இரெண்டாம் முன்றம் தடவை பார்கின்றனர்.

அனைவரும் பாராட்டிய எந்திரன் படத்தை நான் பார்க்காமல் சன் குழுமம் நம்மை ஏமாற்றி நம் தினசரி வாழ்வில் வரும் மற்ற படங்களை போல அல்லாமல் இந்த எந்திரன் பாடத்தை சன் குழுமம் நமக்குள் திணித்த இந்த பாடத்தை பற்றி பலரும் பாராட்டி விமர்சனம் வலை பூக்களில் எழுதி உள்ளனர் ஆனாலும் படம் பார்த்த பிறகு  என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்ய விரும்பி எழுதிகிரேன் விமர்சனம் என்றல் படத்தின் கதை இல்லை என்னேன்றல் பாடத்தை அனைவரும் பார்த்து இருபிர்கள் அதனால்  பாடத்தை பற்றி தான்.

எந்திரன் இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை ஷங்கர் எப்பொழுதும் மக்களின் பிரச்சனைகள் பற்றி ஒரு மைய கருத்தை வைத்து தான் இருக்கும் அவரின் சென்ற படமான சிவாஜியில் கூட அளவுக்கு அதிகமாக சொத்தை வெளி நாட்டிலும் பினாமி பெயரிலும் உள்ள சொத்தை அவர்களிடம் இருந்து பறித்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவர் அவரின் அனைத்து படங்களிலும் மக்களை பற்றி ஒரு மைய கருத்து இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு ரோபோவின் காதலை பற்றி அதுவும்  கிராபிக்ஸ் அனைத்தும் ஹாலிவூட் தரத்திற்கு என்று கூறி ஒரு சுட்டி டிவி ஜெட்டிக்ஸ்  என்று குழந்தைகளின் டிவிகளில் வருவது போன்றும் ராமநாராயணன் படத்தில் வருவது போன்றும் தான் உள்ளது .

படத்தை பற்றி சொல்லும் போது முதற் பாதியில் ரஜினி எந்திரனை உருவாக்கும் விதம் நல்ல உள்ளது. சந்தனமும் கருணாசும் அந்த ரோபோ உருவாகும் போது அவர்கள் செய்யும் காமடியும் பரவாயில்லை ஆனாலும் சந்தானம் கருணாசின் காமடி பெரிதாக ஏடு படவில்லை. அந்த ரோபோ உருவனதுக்கு பிறகு படம் போறது தெரியாமல் நல்ல இருக்கு அதிலும் ரோபோ செய்யும் காமடி நன்றாக உள்ளது அதிலும் ரோபோவிடம்  கொச்சி ஹனிபா செய்யும் காமடி மிகவும் நன்றாக உள்ளது மற்றும் ரோபோ செய்யும் சிறு சிறு காமடிகளும் மிகவும் நன்றாக உள்ளது படத்தின் முதற் பாதி ஷங்கரின் மற்ற பாடத்தை போன்று மிகவும் ஜாலியாக நன்றாக உள்ளது அதிலும் ரஜினி ரோபோவ நடிப்பில் வென்று உள்ளார் அவர் ரோபோவ பேசும் விதம் மிகவும் நன்றாக உள்ளது ரோபோவாக ரஜினி நடிப்பில் ஒரு படி மேலை சென்று விட்டார்.


ரோபோ பிரசவம் பார்ப்பது என்பது எல்லாம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படத்தின் இரெண்டாம் பாதியில் அதை எல்லாம் மிஞ்சும் வகையில் வருவதால் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அதிலும் ரோபோ போய் கொசுவை பிடிக்க சென்று அதனிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர இருக்கு.


ரெண்டாவது பாதியில் ஷங்கர் நம்மை சிறு குழந்தைகளாக மாற்றி சுட்டி டிவி ஜெட்டிக்ஸ் போன்ற சேனலில் வருவது போன்று கிராபிக்ஸ்  மயமாக  படத்தை மாற்றி விடுகிறார் அதிலும் எந்திரன் படம் இந்திய வரலாற்றில் தயாராகும் மிக பெரிய பட்ஜெட் படம் என்று கூறினார்கள் ஹாலிடவுட்   படத்திற்கு இணையான கிராபிக்ஸ் ஹாலி படத்தில் பணி செய்தவர்கள் தான் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் வேலை செய்தனர் என்று சொன்னார்கள் ஆனால் ரெண்டாம் பாதியில் நிறைய ரோபோ வரும் கட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் மிகவும் கேவலமா உள்ளது இந்த அளவுக்கு நிறைய பணம் ஹாலிவுட்  படத்தில் வேலை செய்தவர்களை ரமணரயணிடம் கொடுத்து இருந்தால் அவர் இந்த எந்திரன் பாடத்தை விட 100 மடங்கு கிராபிக்ஸ் இல் சிறந்த படத்தை கொடுத்து இருந்திருப்பர் .

ரோபோ ரஜினி வில்லனாக மாறியதும் படம் பார்க்கும் நம் அனைவர்க்கும் ஒரு வித எரிச்சல் வருகிறது மற்றவர்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு வந்தது அதிலும்  ரோபோ தனக்கு தானே உடனேய நிறைய ரோபோக்கள் செய்து கதாநாயகியை கடத்தி தனி ராஜ்யம் போல இருப்பது நல்ல இல்லை அதவும் நிறைய ரோபோகள் வரும் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது அதிலும் ரெண்டாம் பாதியில் அடுத்து அடுத்து பாடல் வருவது அலுப்பாக உள்ளது.

ரெண்டாம் பாதியில் ரோபோ ரஜினி மே மே என்று ஆடு போல கத்தி உண்மையான ரஜனிய கண்டுபிடிக்கும் காட்சி மட்டும் நன்றாக உள்ளது.

படத்தின் இறுதி காட்சிகளிலும் ரோபோ  ஐஸ்வர்யாவை கடுத்தும் போதும் ரோபோ சண்டை இடும் காட்சிகள் ரொம்ப போர் அதிலும் படத்தின் இறுதியில் ரோபோ பலவாரு மாறுவது கிராபிக்ஸ் இல் மிகவும் கேவலமாக உள்ளது ஹாலிவுட் அளவிற்கு ஷங்கர் முயற்சி செய்து உள்ளார் ஆனால் கட்சில் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது ஏதோ கார்ட்டூன் டிவி பார்ப்பது போன்று உள்ளது அது மட்டுமா எப்பட படம் முடியும் என்று உள்ளது.

மொத்தத்தில் எந்திரன் முதல் பாதி மட்டும் பார்க்கலாம்.

ரஹ்மானின் பாடல்களில் காதல் அணுக்கள் மற்றும் கிளிமஞ்சாரோ பாடல் மட்டும் மனதில் பதிகின்றன மற்ற பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை ரஹ்மான் ஷங்கர் ரஜினி இவர்களின் மற்ற பட பாடல்கள் அனைத்தும் மிக பெரிய ஹிட் ஆகும் ஆனால் இந்த படத்தில் அனைத்தும் பாடல்களும் மக்களிடம் பெரிதாக போய் சேர வில்லை படத்தின் பின்னணி இசையும் பெரிதாக சொல்லிகொள்ளும்படி இல்லை.

எந்திரனில் ஜொலிப்பது ரோபோ ரஜினியின் நடிப்பு மற்றும் சன் குடும்பத்திற்கு பண மழை தான்,

கண்டிப்பாக ஷங்கரின் கனவு படமாக எந்திரன் இருந்திருக்கும் அது சன் குழுமம் கைவசம் செல்லும் முன்பு ஆனால் ஷங்கர் நினைத்த எந்திரன் கண்டிப்பாக இந்த எந்திரன் படமாக இருக்காது இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை சன் குழும படம் இந்த படத்திற்கு அப்படி என்னதான் 200 கோடிக்கு செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை பாடலுக்கு தான் செலவு நம்மை போன்றவர்களை ஏமாந்து இந்த படத்தை பார்த்ததுதான் செலவு.

எந்திரன் சன் குழுமத்திற்கு அடித்த ஜாக்பாட்.......

Friday, October 15, 2010

வெற்றியும் தோல்வி

 வெற்றியும் தோல்வியும்


வெற்றி

வெற்றி எதிரியை மட்டும் சேர்க்கும்
ஒரு மிக பெரிய எதிரி

தோல்வி

தோல்வியின் தனிமையில் உற்ற நண்பர்களை
நமக்கு உரித்து கட்டும்
ஒரு உற்ற தோழன்  

மனிதனை அளிக்கும் இயற்கை

மனிதனை அளிக்கும் இயற்கை 



மனிதனுக்குள் எத்தனை விதமான அறிவுகள்  எத்தனை  இருகின்றது என்று மனிதனே மனிதனை பற்றி பலவித ஆராய்சிகள் செய்கின்றான் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ந்து  அதற்கு மருந்தும் கண்டு பிடிகின்ற்றான் ஆனால் உண்மைலே அந்த நோய்கள் ஏற்பட காரணமானவன் மனிதன் தான். ஒரு தவறு செய்ய்பவனும்மே மனிதன் அதை திருத்த நினைப்பதும் மனிதனே.

மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று சொல்கின்றனர் ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றல் இயற்கையை மீறி புதிய புதிய  கண்டுபிடிப்புகள் என்று மனிதன் இயற்கையை  மீறி  இயற்கையை வெல்ல ரொம்ப ஆர்வமாய் இருக்கிறான் ஆனால் இயற்கையை வென்றதாக மனிதர்கள் நினைகிறார்கள் ஆனால் கடைசியில் வெல்வது இயற்கை தான்.


நம்மை சுற்றி இருப்பவை இயற்கை அந்த இயற்கையே அடிப்படையாக வைத்தே மனிதன் அந்த காலத்தில் வாழ்ந்தான் ஆனால் காலம் செல்ல செல்ல மனிதன் அந்த இயற்கையே அளித்து மனிதனின் படைப்பை அடிபடையாக வைத்து வாழ அற்பித்தன் அதனால் தான் அந்தந இயற்கை அழிவு நமக்கு பல்வேறு நோய்கள் இயற்கை சீற்றங்கள் என்று பல மனிதனை அளிக்க நடக்கின்றது ஆனால் மனிதன் ஒவ்வரு அழிவின் போதும் அதை தடுப்பது எப்படி என்று நினைத்து இயற்கையே அளிப்பதை விடாமல் அதை தடுகின்றோம்  என்று கூறி புதிய புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து மேலும் அழிவை தேடி கொள்ளுகின்றோம்.

தினம்தோறும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வர வர அதனல் இயற்கை எப்படியும் ஒரு வகையில் அழிந்து கொண்டு இருக்கின்றது.

என்னதான் பலவிதமான அமைப்புகள் இயற்கையை காக்க வேண்டும்  என்று செயல் பட்டாலும்   உலக  வல்லரசு  நாடுகளும்  சேரி  உலக  வல்லரசு  ஆகா  துடிக்கும்  நாடுகளும் சேரி   தொழில் முன்னேற்றம் விஞ்ஞான முன்னேற்றம் விண்வெளியில் போய் மனிதன் வாழ போகிறான் என்று அதில் நாடுகளுக்கு இடையில் போட்டி என்று கூறி இயற்கையே அளித்து கொண்டு உள்ளனர்.

தொழில் முன்னேற்றம் என்று கூறி இருக்கும் விலை நிலங்களை எல்லாம் தொழிற் கூடங்களாக மாற்றி விவசாயத்தை உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு கொண்டு அழித்து கொண்டு இருக்கின்றனர் இது மட்டுமா தொழில் முன்னேற்றத்தால் எப்போலுவதும் முன்னேறுவது நகரங்கள் மட்டும் தான் நகரங்கள் முன்னேறுவதால் அங்கு தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசாயத்தை விட்டு விட்டு நகரத்தை நோக்கி வருகின்றனர் இதனால் விளைநிலம் வெறும் நிலமாக மாறுகின்றது இது தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது அவர்கள் விலை வெறும் நிலங்களை தொழிற் கூடங்களாக மாற்றுகின்றனர் இதனால் வரும் காலத்தில் மனிதன் தொழிற் தொழிற் என்று கூறி உண்பதற்கு உணவு இல்லாமல் மனித இனம் அழிவை நோக்கி செல்கின்றது .

மனிதன் புதிய புதிய கண்டு பிடிப்புகள் என்று கூறி உலகத்தை அளித்தது போதாது என்று உலகத்தை அளித்த பின் வாழ இடம் தேடி இப்பொழுது விண்வெளியில் இடம் தேடி கொண்டு இருக்கின்றன் . விண்வெளியில்  உண்மைலேயே மனிதர்கள் போல யாரேனும் அங்கு வாழ்ந்தால் பின் ஒரு நாள் அங்கு சென்ற மனிதன் அங்கும் புதிய கண்டுபிடிப்பு என்று அங்கு உள்ளவர்களையும் அழித்து விடுவான் இதை சொல்லாமல் மனிதன் சொல்லத்தான் விண்வெளியில் உள்ளவர்களை அளிப்பது போன்று ஒரு மிக பெரிய ஆங்கில படம் அவதாரை மனிதன் இப்பொழுதே எடுத்து விட்டான் போல அதனால் தான் அந்த படமும் நம்மிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு மிக பெரிய வெற்றி படமாக ஆனதோ.

ஏதோ எப்படியோ 2012 எப்போவோ  இந்த உலகம் மட்டும் அல்ல அழிவு என்று எங்கு எதில் ஏற்பட்டாலும் அது மனிதனால் மட்டும் தான் . 

Friday, October 8, 2010

ஜன்னல் ஓர சீட்டு

ஜன்னல்  ஓர  சீட்டு


ஜில் என  வீசும்  காற்று
திரு திருவென வேடிக்கை பார்க்கும் கண்கள்
கண்களை கொள்ளை அடிக்கும் பசுமை காட்சிகள்
மனதை மயக்கும் இதமான பாடல்
என்னையே மறந்து நான் பயணிக்க
அப்படி என்ன விசேஷ சக்தி உள்ளதோ
பலரை அந்த சீட்டுக்கு ஏங்க வைக்கிறது.....  

Wednesday, October 6, 2010

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முஷாரப் ஜாலியா சொல்லுறாரு

 இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முஷாரப் ஜாலியா சொல்லுறாரு

இன்று தினமலர் இன்னைய தளத்தில் ஒரு  செய்தி படித்தேன் பார்க்க பாகிஸ்தானியர்களுக்கு  உண்மையிலே ரொம்ப தான் தில்லுனு  தோனுச்சு ஏன்னு  கேளுங்க பாகிஸ்தான் முன்னால் அதிபர் லண்டனில் ஒரு  பேட்டில சொல்லிறுக்காறு  அவரு ஆட்சில இருக்கும் போது இந்தியாவில் நாசா வேலைகள் செய்ய திவிரவதிக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி கொடுத்தது என்று ஊர் அறிய பேட்டி கொடுக்குறாரு எப்பா உண்மைலே அவருக்கு ரொம்ப தில்லுதான் .

உலக நாட்டு தலைவர்கள் எல்லாம்  திவிரவாதத்தை ஒழிக்கணும்  என்று அந்த மாநாடு இந்த மாநாடு என்று கூடி  கூடி பேசி நல்ல பேட்டி தான் கொடுக்குறாங்க  அவங்க தலைவர இல்லை இந்தியாவில தீவிரவாதத்தை  வளர்க்க தீவிரவாதிகளுக்கு பணமும் பயிற்சியும் பாகிஸ்தான் அரசே கொடுக்குதுன்னு  பேட்டி கொடுகுகின்றரே  முஷாரப் இவர் அல்லவா தலைவர் .

Monday, October 4, 2010

எந்திரனும் கலைஞர் டிவியும்

எந்திரனும் கலைஞர்  டிவியும்


எந்திரன் உலக  வரலாற்றில்  மிக பெரிய  வெற்றி  தமிழ் சினிமாவில்  ஒரு  ஹாலிவுட் தரத்திற்கு  இணையான  படம்  உலகம்  முழுவதும்  வசூல் மழை உலகம்  முழுவதும் திரை அரங்குகளில்  மக்கள் வெள்ளம். தமிழ் திரை உலகமே இது வரை கண்டிராத  பிரமாண்ட திரை படம். உலகமே  எதிர் பார்த்த திரைப்படம் மிக பெரிய வெற்றி கண்டது. ஷங்கரின்   இயக்கம்  மிகவும்  அருமையாக உள்ளது  ரஜினியின் நடிப்பு  முன் எப்பொழுதும் உள்ளதை விட  அருமையாக உள்ளத அணைத்து விதங்களிலும் படம் மிக பெரிய வெற்றி உலகம் முழுவதும் வெற்றி வெற்றி வெற்றி ... 

என்னட எந்திரன்  பாடத்தை  எதிர்த்து  எழுதிய இவன  இப்படி  எழுதுகிறன என்று  நினைத்து விட்டிர்கள  இவைகளை போன்று தான் நாம் இப்பொழுது  அதிகம் படிக்கிறோம்  எங்கு பார்த்தாலும் எந்திரன் வெற்றி வெற்றி பிரமாண்ட வெற்றி உலகமே வியக்கும் வெற்றி இதன்  இப்ப யாருங்க  படம் வெற்றி இல்லைன்னு  சொன்னது .

எந்திரன் படமும்  எதிர்பார்த்தது போல மிக பெரிய வெற்றி தான்  ஒத்துகொள்கிறோம் ஆனால் எந்திரன் படம் தானே வெற்றி கண்டு  உள்ளது ஏதோ இந்திய அமெரிக்காவுடன்  போர்  செய்து  வென்றது  போல அல்லது  இந்தியாவில்  உள்ள அனைவர்க்கும் ஏதோ இந்த படத்தின் முலம் நல்லது  நடந்தது போல ஏன் அனைவரும்  எந்திரன் எந்திரன் என்று எந்திரன் புராணம் படுகின்றனர்.

இது வெறும் படம் தான் படம் என்பது நாம் பொழுதுபோக்கிற்கு  பார்ப்பது தான் ஆனால் இந்த பாடத்தை மக்கள் கொண்டாட வேண்டியதுதான்  ஆனாலும்  சிலர்   எந்திரன் என்ற  உலகத்திற்குள் முல்கிவிட்டனர். இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டியதுதான் ஆனால்  எதை பார்த்தாலும் எந்திரன் எதை படித்தாலும் எந்திரன் மக்களை ஏமாற்ற சன் நிறுவனம் தான் அதன் மீடியா முழுவதிலும் எப்போலுவதும் போட்டு கொண்டு இருகின்றனர்  அதை பார்த்து நாமும் ஏமாந்து கொண்டுதான் இருகின்றோம் பின்பு  ஏன் வலை பதிவு முழுவதும் அனைவரும் எந்திரனை பற்றியே  எழுதுகின்றனர் .

இதே இந்தியாவில் தான் உலகத்தில் உள்ள  70  நாடுகள் பங்குகொள்ளும் காமன் விழ்த்து போட்டிகள் நடகின்றது  அதில் நாட்டு அரசியல்வாதிகள் செய்த  ஊழல் என்னற்றது  அதை  பற்றி எல்லாம் யார் கவலை படுவார்கள்  நமக்கு முக்கியம் எந்திரன் தானே .

இப்படி நம் மக்கள்  எப்போலுவதும்  திரை உலகிற்கு மட்டும் முக்கியத்துவம்  கொடுப்பதால் தான் திரை உலகத்தில் உள்ளவர்கள்  மட்டுமே  நம்  தமிழகத்தை  ஆட்சி  செய்து வருகின்றனர்  அவர்கள் மட்டுமே  இன்னும் நம்மை ஆட்சி செய்ய  புதிது புதிதாக  பலர் வந்த  வண்ணம்   உள்ளனர்  நாமும்  அவர்களுக்கு சிகப்பு  கம்பளம்  விரித்து வரவேற்கின்றோம்  இந்த நிலை  என்று மாறும் . 


இது போல திரை உலகத்தினர்  ஆட்சி செய்வதால்தான் மக்கள்   அனைவருக்கும்  வாழ வழி உள்ளதோ இல்லையோ   கண்டிப்பாக  படம் பார்க்க வேண்டும்  என்று கலர் டிவி  கொடுகின்றது நம்  அரசு அதையும்  இது பெரிய  நாலா திடம் என்று மக்கள்  வரவேற்று   வாங்கி கொள்கின்றனர் ஏன்னா  நமக்கு  நல்ல சாப்பிடுவதற்கும்  நல்ல வாழ்வதற்கும்  நம் நாட்டை முன்னேற்றுவதற்கும் நம் அனைவர்க்கும் வேலை முக்கியம் இல்லை டிவி தான் முக்கியம் .  

இந்த  அரசு சினிமாவை பெரிதாக நினைத்தால் தான் இங்கு ஆட்சி செய்யும் குடும்பத்தினர்  அனைவரும் சினிமாவையே  முக்கிய தொழிலாக  கொண்டு உள்ளனர் ஏன் தமிழ் சினிமாவையும் அவர்கள் தான் ஆளுகின்றனர்.மக்கள் நாம் அதை கண்டு தான் சீக்கிரம் எமருகின்றோம் சினிமாவயே அனைவரின் ரோல் மாடலாக நினைக்கிறோம் .

திரை படம் நம் பொழுது போக்கிற்குத்தான் உள்ளது அதன் முலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை  சொல்லலாம் கருத்துகள் சொல்கின்றனர்  என்பதால்  அவர்களை பெரும் தலைவர்களாய் நாம் ஏற்க  முடியாது  ஏன் என்றல்  அந்த படத்தில் அவர்கள் அதில் வருமான  நடிக்க  மட்டுமே  செய்கின்றனர் .

இங்கு எனக்கு எந்திரன்  பாடத்தை பற்றி தப்பாக  சொல்லும் எண்ணம்  எதுவும் இல்லை  படம் நன்றாக உள்ளது என்று அனைவரும்   கூறுகின்றனர்  அதலால்  படம் பார்க்கலாம்  ஆனால் அந்த படத்தையே  பெரிதாக  நினைத்து நம் கொண்டாடுவது  சரியல்ல இந்த பாடத்தை போன்றே சிறிய அளவில் கதையில் இன்னும் இதை விட நன்றாக ஒரு புதுமுகமா அல்லது வேறொரு  நடிகரோ நடித்து இருந்தால் இப்படி கொண்டடுவிர்களா .

படம் என்பது நம் பொழுது போக்கிற்கு மட்டும் தான் ....

தனிமையிலே இனிமை காண முடியுமா

 தனிமையிலே  இனிமை காண முடியுமா 


எவன் ஒருவன்  தனிமையை வென்று 
இனிமை  அடைந்தானோ 
அவன் வாழ்வில் துன்பங்களை வென்று 
துன்பங்களையும் இன்பம்  ஆக்கி கொள்வோம்

தனிமையில் நாம் நம்மை பற்றி நாமே அலசி நாம்  செய்த அனைத்தையும் யோசித்து பார்த்தல் நாம் செய்த தவறை உணர்ந்தால் எப்பேர்பட்ட  துன்பத்தையும்  கஷ்டத்தையும்  எளிதில் வென்று  துன்பத்தை இன்பம் ஆக்கி கொள்ளும்  வல்லமை பெறுவோம்.  கிறுக்கல்கள்

Sunday, October 3, 2010

அவசரம்

 அவசரம்

அவரசம் நம் வாழ்வில் எப்பொழுதும் ஒரு அவசரம் இருந்து கொண்டே இருக்கும் . இந்த அவசரத்தினால் நம் இழந்தவை நிறைய இருக்கும் இழந்த பின்பு ஐயோ அவசர பட்டுட்டேன் டா என்று சொல்வது உண்டு.

இந்த அவசரத்தினால் நமக்கு டென்ஷன் தான் அதிகம் ஆகும் இதனால் நமக்கு பிரச்சனைகள் அதிகம் வரும் . காலையில் எழுந்து வேலைக்கோ கல்லுரிகோ எங்கயோ வெளிய போவதற்கோ விட்டில் இருந்து கிளம்பும்போது இருந்து நமக்கு அவசரம் தான் விட்டில் இருந்து அவசர அவசரமா கிளம்பி ஐயோ பஸ் போய்டும் சீக்கிரமா போய் பஸ் புடிகனும் இல்ல train பிடிக்கணும் சீக்கிரமா ஆபீஸ் போகணும்னு பைக்க வேகமா ஓட்டுறது என் நீங்க பார்த்து இருப்பிர்கள் அல்லது நிங்களும் செய்திர்பிர்கள் சிக்னல் முடியுறதுக்கு உள்ள வேகமா போறது  trainla இருந்து இறங்கி அடுத்த train பிடிக்க வேகமா போறதுன்னு காலையில் ஏன் நாள் முழுவதும் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் அவசரம் தான் முதல் இடம் பிடிக்கும் .

ஏதேனும் ஒரு பிரச்னை என்றல் கூட இந்த அவசரத்தினால் சிறு பிரச்னை கூட ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். பிரச்னை மட்டும் இல்ல சந்தசமான நிலையில் கூட
அந்த சந்தோஷத்தில் கூட ஒரு சிறு அவசரத்தால் அதுவும் மாறும் நிலை உருவாகும் .

காதலன் படத்தில் ஒரு வசனம் வரும்  சந்தோசம் ஆனாலும் துக்கம் ஆனாலும் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வச்சிக்கோ என்று அது 100 / 100   உண்மை.

எந்த ஒரு கஷ்டம் ஆனாலும் துக்கம் ஆனாலும் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வச்சிகிடோம்ன அது சந்தோசம்ன ரொம்ப பெரிய சந்தோசமா கிடைக்கும் பிரச்சனைய இருந்த அந்த 5 நிமிஷத்துல நமக்குள்ள ஒரு அமைதி கிடைக்கும் பொறுமையா இருப்போம் அந்த பிரச்சனைய எப்படி சரி பண்ணலாம்னு நமக்குள்ள ஒரு எண்ணம் வரும் இதனால அந்த பிரச்சனயும் சரி ஆகிடும் .

நம் தினசரி வாழ்வில் நாம் எப்பொழுதும் அவசர பட்டுகொண்டே இருகின்றோம் அந்த அவசரத்தை தவிர்த்து கொஞ்சம் நிதானமாக  பொறுமையாக அமைதியாக அணைத்து விசயங்களையும் கையாண்டால் நம் வாழ்விலும் மனதிலும் என்றும் வெற்றியும் ஒரு வித அமைதியும் சந்தோசமும் என்றும் நிலைத்து இருக்கும் .

Friday, October 1, 2010

எந்திரன் எந்திரன் எந்திரனை கண்டாலே ஒரே கடுப்பா வருது

எந்திரன் எந்திரன் எந்திரனை கண்டாலே ஒரே கடுப்பா வருது 


எங்கே பார்த்தாலும் எந்திரன் எங்கு திரும்பினாலும் எந்திரன் எண்ணப இது அது வெறும் படம் தானே ஒரு படத்துக்கு என் இவ்வளவு அர்பாட்டம்னு தெரியல .

மக்கள் மத்தியில் ஒரு படத்துக்கு என் இந்த பரபரபுன்னு தெரியல நாம் பொழுது போகிற்குதானே படம் பார்ப்பது ஆனா இந்த எந்திரன் படம் மாதிரி தெரியல உண்மைலே நம் மீது நமகே  பிடித்தாற்போல் திணிக்கபட்ட ஒரு வியாபாரம்  நம்மை ஏமாற்றி ஒரு படத்தை நம் மீது திணித்து பல கோடி கொள்ளை அடிக்க பட்டுஉள்ளது.

ஒரு நல்ல படம்ன அந்த படம் ரிலீஸ் ஆகி அந்த படம் நல்ல இருக்குனு அதை மக்கள் பார்த்து ஒருவர் மட்ட்ரவரிடம் சொல்லி பிரபலம் அடைய வேண்டும் ஆனால் இந்த படமோ ஒரு பெரிய இயக்குனர்  தயாரிப்பாளர் நடிகர் நடிகைன்னு எல்லாமே பெரிய ஆட்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு ஒரு கருத்து உள்ள படமா கொடுப்பார்கள் எவ்வளவு மக்களை ஏம்மாற்றி கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் இதற்கு அவர்கள் கையாளும் யுக்தி பிரமாண்டம் பிரமாண்டம் .

எந்திரன் படம் பார்கலைய பார்கலைய அது படம் தானே வேற ஒன்னும் இல்லையே
அத பாக்குறது என்னமோ பெரிய கெளரவம நினைகிரங்க பார்கலைன்னு சொன்ன இன்னும் நி பார்கலைய என்று ஏளனம பார்கிரங்கள் .

இந்த படம் பல சாதனை படைசிருச்சம் உலக நாடுகளில் பல திரை அரங்குகள் ரிலீஸ் ஆகி உள்ளதாம் என் தமிழ் நாட்டில் கிட்டதட்ட அனைத்து ஊர்களிலும் அனைத்து திரை அரங்குகளிலும் இந்த படம் தான் ரிலீஸ் ஆகி உள்ளது இதுவும் ஒரு வியாபார யுக்தி தான்
ஏன்னா மக்கள் அனைவர்கிட்டையும்  முதல் நாள் பார்க்கணும் என்று ஒரு மாயே உருவாக்கி எல்லாரும் முதல் வாரத்தில் பார்த்தல் வசூலில் சாதனை என்று காட்ட அணைத்து திரை அரங்கிலும் ரிலீஸ் செய்து உள்ளனர் இதனால் மாற்ற தமிழ் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி போகி உள்ளது இத மாற்ற படங்களையும் பாதித்து உள்ளது .

எனக்கு இந்த எந்திரனை கண்டாலே பிடிக்கவில்லை  அதனல்  டிக்கெட் கிடைத்தும் என் நண்பரை பார்க்க சொல்லிவிட்டேன் .

இனி நாம் யாரும் சன் டிவி அனைத்து டிவி களையும் பார்க்க முடியாது  வெறும் எந்திரன்  விளம்பரம் தான் வரும்  டிவில  மட்டும் இல்ல தினகரம் கும்குமம் தமிழ் முரசு என்று சன் நிறுவனங்களில்  எல்லாம் எந்திரன் தான் ஆனால் இந்த முறை நம் நாடு முழுவதும் உள்ள அணைத்து  மக்களும் ஏமாறுகின்றனர். 

எந்திரன் சன் நிறுவனத்திற்கு  பல கோடியை கொட்டி கொடுத்த  மந்திரன் .........

 ஒரு படத்திற்கு நம் மக்கள் இவ்வளவு ஏமாறுவதால் தான் நம்மை ஏமாற்றி இன்னும் சுயநலம் அடைகின்றனர் சிலர் .
    பல லட்சம் கோடி கோடியை ஒரே குடும்பம் சம்பாதித்து அப்படி என்னதான் செய்வார்கள் என்று தெரியவில்லை.
Related Posts with Thumbnails