நானும் பார்த்துவிட்டேன் எந்திரனை
என் நண்பனின் வலியுருதளுக்கு இணங்க நேற்று இரவு எந்திரன் படத்திற்கு சத்யம் திரை அரங்கிற்கு சென்றேன் என்னுடன் வந்த என் நண்பர்களில் நான் மட்டும் தான் அந்த படத்தை முதல் முறையாக பார்கிறேன் மற்றவர்கள் எல்லாம் இரெண்டாம் முன்றம் தடவை பார்கின்றனர்.
அனைவரும் பாராட்டிய எந்திரன் படத்தை நான் பார்க்காமல் சன் குழுமம் நம்மை ஏமாற்றி நம் தினசரி வாழ்வில் வரும் மற்ற படங்களை போல அல்லாமல் இந்த எந்திரன் பாடத்தை சன் குழுமம் நமக்குள் திணித்த இந்த பாடத்தை பற்றி பலரும் பாராட்டி விமர்சனம் வலை பூக்களில் எழுதி உள்ளனர் ஆனாலும் படம் பார்த்த பிறகு என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்ய விரும்பி எழுதிகிரேன் விமர்சனம் என்றல் படத்தின் கதை இல்லை என்னேன்றல் பாடத்தை அனைவரும் பார்த்து இருபிர்கள் அதனால் பாடத்தை பற்றி தான்.
எந்திரன் இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை ஷங்கர் எப்பொழுதும் மக்களின் பிரச்சனைகள் பற்றி ஒரு மைய கருத்தை வைத்து தான் இருக்கும் அவரின் சென்ற படமான சிவாஜியில் கூட அளவுக்கு அதிகமாக சொத்தை வெளி நாட்டிலும் பினாமி பெயரிலும் உள்ள சொத்தை அவர்களிடம் இருந்து பறித்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவர் அவரின் அனைத்து படங்களிலும் மக்களை பற்றி ஒரு மைய கருத்து இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு ரோபோவின் காதலை பற்றி அதுவும் கிராபிக்ஸ் அனைத்தும் ஹாலிவூட் தரத்திற்கு என்று கூறி ஒரு சுட்டி டிவி ஜெட்டிக்ஸ் என்று குழந்தைகளின் டிவிகளில் வருவது போன்றும் ராமநாராயணன் படத்தில் வருவது போன்றும் தான் உள்ளது .
படத்தை பற்றி சொல்லும் போது முதற் பாதியில் ரஜினி எந்திரனை உருவாக்கும் விதம் நல்ல உள்ளது. சந்தனமும் கருணாசும் அந்த ரோபோ உருவாகும் போது அவர்கள் செய்யும் காமடியும் பரவாயில்லை ஆனாலும் சந்தானம் கருணாசின் காமடி பெரிதாக ஏடு படவில்லை. அந்த ரோபோ உருவனதுக்கு பிறகு படம் போறது தெரியாமல் நல்ல இருக்கு அதிலும் ரோபோ செய்யும் காமடி நன்றாக உள்ளது அதிலும் ரோபோவிடம் கொச்சி ஹனிபா செய்யும் காமடி மிகவும் நன்றாக உள்ளது மற்றும் ரோபோ செய்யும் சிறு சிறு காமடிகளும் மிகவும் நன்றாக உள்ளது படத்தின் முதற் பாதி ஷங்கரின் மற்ற பாடத்தை போன்று மிகவும் ஜாலியாக நன்றாக உள்ளது அதிலும் ரஜினி ரோபோவ நடிப்பில் வென்று உள்ளார் அவர் ரோபோவ பேசும் விதம் மிகவும் நன்றாக உள்ளது ரோபோவாக ரஜினி நடிப்பில் ஒரு படி மேலை சென்று விட்டார்.
ரோபோ பிரசவம் பார்ப்பது என்பது எல்லாம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படத்தின் இரெண்டாம் பாதியில் அதை எல்லாம் மிஞ்சும் வகையில் வருவதால் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அதிலும் ரோபோ போய் கொசுவை பிடிக்க சென்று அதனிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர இருக்கு.
ரெண்டாவது பாதியில் ஷங்கர் நம்மை சிறு குழந்தைகளாக மாற்றி சுட்டி டிவி ஜெட்டிக்ஸ் போன்ற சேனலில் வருவது போன்று கிராபிக்ஸ் மயமாக படத்தை மாற்றி விடுகிறார் அதிலும் எந்திரன் படம் இந்திய வரலாற்றில் தயாராகும் மிக பெரிய பட்ஜெட் படம் என்று கூறினார்கள் ஹாலிடவுட் படத்திற்கு இணையான கிராபிக்ஸ் ஹாலி படத்தில் பணி செய்தவர்கள் தான் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் வேலை செய்தனர் என்று சொன்னார்கள் ஆனால் ரெண்டாம் பாதியில் நிறைய ரோபோ வரும் கட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் மிகவும் கேவலமா உள்ளது இந்த அளவுக்கு நிறைய பணம் ஹாலிவுட் படத்தில் வேலை செய்தவர்களை ரமணரயணிடம் கொடுத்து இருந்தால் அவர் இந்த எந்திரன் பாடத்தை விட 100 மடங்கு கிராபிக்ஸ் இல் சிறந்த படத்தை கொடுத்து இருந்திருப்பர் .
ரோபோ ரஜினி வில்லனாக மாறியதும் படம் பார்க்கும் நம் அனைவர்க்கும் ஒரு வித எரிச்சல் வருகிறது மற்றவர்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு வந்தது அதிலும் ரோபோ தனக்கு தானே உடனேய நிறைய ரோபோக்கள் செய்து கதாநாயகியை கடத்தி தனி ராஜ்யம் போல இருப்பது நல்ல இல்லை அதவும் நிறைய ரோபோகள் வரும் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது அதிலும் ரெண்டாம் பாதியில் அடுத்து அடுத்து பாடல் வருவது அலுப்பாக உள்ளது.
ரெண்டாம் பாதியில் ரோபோ ரஜினி மே மே என்று ஆடு போல கத்தி உண்மையான ரஜனிய கண்டுபிடிக்கும் காட்சி மட்டும் நன்றாக உள்ளது.
படத்தின் இறுதி காட்சிகளிலும் ரோபோ ஐஸ்வர்யாவை கடுத்தும் போதும் ரோபோ சண்டை இடும் காட்சிகள் ரொம்ப போர் அதிலும் படத்தின் இறுதியில் ரோபோ பலவாரு மாறுவது கிராபிக்ஸ் இல் மிகவும் கேவலமாக உள்ளது ஹாலிவுட் அளவிற்கு ஷங்கர் முயற்சி செய்து உள்ளார் ஆனால் கட்சில் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது ஏதோ கார்ட்டூன் டிவி பார்ப்பது போன்று உள்ளது அது மட்டுமா எப்பட படம் முடியும் என்று உள்ளது.
மொத்தத்தில் எந்திரன் முதல் பாதி மட்டும் பார்க்கலாம்.
ரஹ்மானின் பாடல்களில் காதல் அணுக்கள் மற்றும் கிளிமஞ்சாரோ பாடல் மட்டும் மனதில் பதிகின்றன மற்ற பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை ரஹ்மான் ஷங்கர் ரஜினி இவர்களின் மற்ற பட பாடல்கள் அனைத்தும் மிக பெரிய ஹிட் ஆகும் ஆனால் இந்த படத்தில் அனைத்தும் பாடல்களும் மக்களிடம் பெரிதாக போய் சேர வில்லை படத்தின் பின்னணி இசையும் பெரிதாக சொல்லிகொள்ளும்படி இல்லை.
எந்திரனில் ஜொலிப்பது ரோபோ ரஜினியின் நடிப்பு மற்றும் சன் குடும்பத்திற்கு பண மழை தான்,
கண்டிப்பாக ஷங்கரின் கனவு படமாக எந்திரன் இருந்திருக்கும் அது சன் குழுமம் கைவசம் செல்லும் முன்பு ஆனால் ஷங்கர் நினைத்த எந்திரன் கண்டிப்பாக இந்த எந்திரன் படமாக இருக்காது இது முழுக்க முழுக்க ஷங்கர் படம் இல்லை சன் குழும படம் இந்த படத்திற்கு அப்படி என்னதான் 200 கோடிக்கு செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை பாடலுக்கு தான் செலவு நம்மை போன்றவர்களை ஏமாந்து இந்த படத்தை பார்த்ததுதான் செலவு.
எந்திரன் சன் குழுமத்திற்கு அடித்த ஜாக்பாட்.......
No comments:
Post a Comment