எந்திரனும் கலைஞர் டிவியும்
எந்திரன் உலக வரலாற்றில் மிக பெரிய வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் தரத்திற்கு இணையான படம் உலகம் முழுவதும் வசூல் மழை உலகம் முழுவதும் திரை அரங்குகளில் மக்கள் வெள்ளம். தமிழ் திரை உலகமே இது வரை கண்டிராத பிரமாண்ட திரை படம். உலகமே எதிர் பார்த்த திரைப்படம் மிக பெரிய வெற்றி கண்டது. ஷங்கரின் இயக்கம் மிகவும் அருமையாக உள்ளது ரஜினியின் நடிப்பு முன் எப்பொழுதும் உள்ளதை விட அருமையாக உள்ளத அணைத்து விதங்களிலும் படம் மிக பெரிய வெற்றி உலகம் முழுவதும் வெற்றி வெற்றி வெற்றி ...
என்னட எந்திரன் பாடத்தை எதிர்த்து எழுதிய இவன இப்படி எழுதுகிறன என்று நினைத்து விட்டிர்கள இவைகளை போன்று தான் நாம் இப்பொழுது அதிகம் படிக்கிறோம் எங்கு பார்த்தாலும் எந்திரன் வெற்றி வெற்றி பிரமாண்ட வெற்றி உலகமே வியக்கும் வெற்றி இதன் இப்ப யாருங்க படம் வெற்றி இல்லைன்னு சொன்னது .
எந்திரன் படமும் எதிர்பார்த்தது போல மிக பெரிய வெற்றி தான் ஒத்துகொள்கிறோம் ஆனால் எந்திரன் படம் தானே வெற்றி கண்டு உள்ளது ஏதோ இந்திய அமெரிக்காவுடன் போர் செய்து வென்றது போல அல்லது இந்தியாவில் உள்ள அனைவர்க்கும் ஏதோ இந்த படத்தின் முலம் நல்லது நடந்தது போல ஏன் அனைவரும் எந்திரன் எந்திரன் என்று எந்திரன் புராணம் படுகின்றனர்.
இது வெறும் படம் தான் படம் என்பது நாம் பொழுதுபோக்கிற்கு பார்ப்பது தான் ஆனால் இந்த பாடத்தை மக்கள் கொண்டாட வேண்டியதுதான் ஆனாலும் சிலர் எந்திரன் என்ற உலகத்திற்குள் முல்கிவிட்டனர். இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டியதுதான் ஆனால் எதை பார்த்தாலும் எந்திரன் எதை படித்தாலும் எந்திரன் மக்களை ஏமாற்ற சன் நிறுவனம் தான் அதன் மீடியா முழுவதிலும் எப்போலுவதும் போட்டு கொண்டு இருகின்றனர் அதை பார்த்து நாமும் ஏமாந்து கொண்டுதான் இருகின்றோம் பின்பு ஏன் வலை பதிவு முழுவதும் அனைவரும் எந்திரனை பற்றியே எழுதுகின்றனர் .
இதே இந்தியாவில் தான் உலகத்தில் உள்ள 70 நாடுகள் பங்குகொள்ளும் காமன் விழ்த்து போட்டிகள் நடகின்றது அதில் நாட்டு அரசியல்வாதிகள் செய்த ஊழல் என்னற்றது அதை பற்றி எல்லாம் யார் கவலை படுவார்கள் நமக்கு முக்கியம் எந்திரன் தானே .
இப்படி நம் மக்கள் எப்போலுவதும் திரை உலகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதால் தான் திரை உலகத்தில் உள்ளவர்கள் மட்டுமே நம் தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர் அவர்கள் மட்டுமே இன்னும் நம்மை ஆட்சி செய்ய புதிது புதிதாக பலர் வந்த வண்ணம் உள்ளனர் நாமும் அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றோம் இந்த நிலை என்று மாறும் .
இது போல திரை உலகத்தினர் ஆட்சி செய்வதால்தான் மக்கள் அனைவருக்கும் வாழ வழி உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் என்று கலர் டிவி கொடுகின்றது நம் அரசு அதையும் இது பெரிய நாலா திடம் என்று மக்கள் வரவேற்று வாங்கி கொள்கின்றனர் ஏன்னா நமக்கு நல்ல சாப்பிடுவதற்கும் நல்ல வாழ்வதற்கும் நம் நாட்டை முன்னேற்றுவதற்கும் நம் அனைவர்க்கும் வேலை முக்கியம் இல்லை டிவி தான் முக்கியம் .
இந்த அரசு சினிமாவை பெரிதாக நினைத்தால் தான் இங்கு ஆட்சி செய்யும் குடும்பத்தினர் அனைவரும் சினிமாவையே முக்கிய தொழிலாக கொண்டு உள்ளனர் ஏன் தமிழ் சினிமாவையும் அவர்கள் தான் ஆளுகின்றனர்.மக்கள் நாம் அதை கண்டு தான் சீக்கிரம் எமருகின்றோம் சினிமாவயே அனைவரின் ரோல் மாடலாக நினைக்கிறோம் .
திரை படம் நம் பொழுது போக்கிற்குத்தான் உள்ளது அதன் முலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லலாம் கருத்துகள் சொல்கின்றனர் என்பதால் அவர்களை பெரும் தலைவர்களாய் நாம் ஏற்க முடியாது ஏன் என்றல் அந்த படத்தில் அவர்கள் அதில் வருமான நடிக்க மட்டுமே செய்கின்றனர் .
இங்கு எனக்கு எந்திரன் பாடத்தை பற்றி தப்பாக சொல்லும் எண்ணம் எதுவும் இல்லை படம் நன்றாக உள்ளது என்று அனைவரும் கூறுகின்றனர் அதலால் படம் பார்க்கலாம் ஆனால் அந்த படத்தையே பெரிதாக நினைத்து நம் கொண்டாடுவது சரியல்ல இந்த பாடத்தை போன்றே சிறிய அளவில் கதையில் இன்னும் இதை விட நன்றாக ஒரு புதுமுகமா அல்லது வேறொரு நடிகரோ நடித்து இருந்தால் இப்படி கொண்டடுவிர்களா .
படம் என்பது நம் பொழுது போக்கிற்கு மட்டும் தான் ....
No comments:
Post a Comment