Monday, August 30, 2010

நான் மகான் அல்ல செய்த மாற்றங்கள்

நான் மகான் அல்ல  செய்த மாற்றங்கள்

நான் மகான் அல்ல படம் பார்த்தேன் ரொம்ப நல்ல படம். இரெண்டே கால் மணி நேரம் ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம். சென்னைல ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்த எதார்த்தமா காமிச்சு இருக்காறு அதே மாதிரி சென்னை லோக்கல் கல்லூரி பசங்க எப்படி இருபங்கனு நல்ல காமிச்சு இருக்காறு.

படத்துல எனக்கு படம் ஆரம்பிச்சதும் கார்த்தி பன்னுரதுலம் ரொம்ப பிடிச்சு இருக்கு அதுலயும் கார்த்தி தான் ஒரு லவ் failurenu  சொல்லி அதுக்கு அவர் சொல்லும் விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.

வாழ்க்கைல ஒரு லைப் நம்மள விட்டு போச்சுன அதை விட ஒரு brightana  லைப் நம்மள தேடி வருதுன்னு அர்த்தம்.

எப்பா என்ன  ஒரு வசனம் என் வாழ்கைக்கு   ஏற்ற  ஒரு  வசனம் ........

இந்த வசனம் தான் என்ன கொஞ்சம் கொஞ்சமாக மற்றலம்னு பாக்குது ஆன என் மனசு  மாறல....
அதுலயும் முக்கியமா அந்த வா வா நிலவ பிடிச்சு தரவ பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அதுல உள்ள பாடல் வரிகள் மனசுக்கு ரொம்ப அறுதல நல்ல இருக்கு........ 

Monday, August 16, 2010

ரெக்கை கட்டி பறக்க

 ரெக்கை கட்டி பறக்க

தினசரி   நம்மை  சுற்றி  எவ்வளவோ  நடக்குது  நாமும் எவ்வளவோ வேலை செய்யுறோம் ஆனா நைட்  சாப்பிட்டு விட்டு நல்லாத்தான் தூங்க போரம் ஆனா சிலபேருக்கு படுத்தும் தூக்கம் வராது எதாச்சும் ஒரு வேலை நாளைக்கு செய்ய வேண்டி இருக்கும் இல்லை இன்னைக்கு செஞ்ச வேலை  எதாச்சும் தப்பா பண்ணி இருப்போம் இல்லைனா எதயாவது பற்றி யோசிசுகிடேஇருப்போம் ஒரு நல்ல தூக்கம் உடனே வராது. நாமும் அங்குட்டு இங்குட்டு பிரண்டு பிரண்டு படுத்து பார்போம் ஆனா தூக்கமே வராது அப்படி இப்படின்னு எப்படியாவது தூகுன்னாலும்   அடுத்த நாள் நம்மால எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது மனசு எதையோ ஒன்னா இழந்த மாதிரியோ இல்ல தேடிகிட்டே இருக்கும் அதனால அந்த நாளும் நமக்கு நல்ல  இருக்காது .

ஆனா  தூங்க போறதுக்கு முன்னாடி டிவியா  OFF  பண்ண  உடனே போய் படுப்போம்
படுக்க போறதுக்கு  முன்னாடி கடைசி நிமிஷம் வரைக்கும் டிவி பார்போம் இதுவே நம்ம
தூக்கத்த கெடுக்கற ஒரு பெரிய விஷயம் ஏன்னா டிவில என்ன பார்த்துட்டு வந்தோமோ
அதே நம்ம மனசுல ஓடிகிட்டே இருக்கும் தூக்கத்தையும்  கெடுக்கும்.

கொஞ்சம் நேரம் மனசு விட்டு  யாரு கூடவாச்சும் பேசுங்க  உங்க மனசுல உள்ள கவலைய  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்க மன பரத்தை குறைக்கும்.

அத விட ஒன்னு செஞ்சக  மனசு அப்படியே  ரெக்கை கட்டி பரந்த மாதிரி  உங்கள அறியாம தூங்கிவிடுவிங்க  அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க FM கேளுங்க
இல்லை மனதிற்கு இதமான  இளையராஜா பாடல்கள் கேளுங்க அதிலும் FM  கேளுங்க
ஏன்னா அதில் அவர்கள் இதமாக பேசும் விதம் அதில் வரும் பாடல்கள் ஆனைத்தும்
நம் மனதை இதமாக்கி நம்மை தலாட்டும் அதில் வரும் மெல்லிசை பாடல்கள் இளையராஜா பாடல்கள் பழைய பாடல்கள் என ஆனைத்தும் நம்மை மெய் மறக்கவைக்கும்  அப்படியே வனத்தில் ரெக்கை கட்டி பறந்து நம்மை அறியாமல் நன்று
தூங்கிவிடுவோம் அடுத்த நாள் நம் மனதும் மிகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும்
அன்றைய தினம் மிக நன்றாக இருக்கும் .....

என்ன நிங்களும் ரெக்கை கட்டி பறக்க  தயாரா .........

Sunday, August 15, 2010

காதலின் ஏக்கம்

காதலின் ஏக்கம்

என் இதயம் துடித்ததோ இல்லையோ
அதை விட அதிகம் உன்னை நினைத்தது
உன் பாசத்தை நினைத்து
உன் அன்பின் அரவனைபிற்கு ஏங்கி ஏங்கி
உன்னை நினைத்தே துடித்தது ........

காதலின் சண்டை

 காதலின் சண்டை

சண்டை போட்டு பிரிந்தோம்
அந்த சண்டையே
உன்னை அதிகம் நினைக்க வைத்தது
என் மனம் உன்னை எந்நேரமும்  நினைத்தது
என் காதல் இன்னும் பெருக்கு எடுத்தது
எங்கு பார்த்தாலும் நீயே
நான் சுவாசிக்கும் மூச்சாய் வந்து
என் உயிராய்  இருந்தாய்
இந்த சண்டையால்
நம் காதலின் உன்னத அன்பு
நமக்கு புரிந்து உள்ளது .....

நேற்று எந்திர மனிதன்

 நேற்று எந்திர மனிதன்

நேற்று  பெரிதாக ஒன்றும் செய்யவில்லை    ரூமில் தூங்கி ரெஸ்ட் தான் எடுத்தேன்
என்னமோ டெய்லி வேலைக்கு போற மாதிரி சண்டே மட்டும் ரெஸ்ட் இல்லங்க தினசரி அதன் வேலை நானும் எவளவோ வேலை தேடிரேன்  ஆனா கிடைக்கல.


எங்க விட்ல போய் எங்க விட்ல மட்டும் இல்லங்க  ஆனைத்து விட்லயும் என செயவ்ங்க
போய் ஜோசியரிடம் ஜாதகம் பார்பாங்க அதன் தான் எங்க விட்லயும் செஞ்சாங்க
ஜோசியரு சொன்னாரம் எனக்கு 7 1/2  சனியம் அதன் இன்னும் 6   மாசத்துக்கு கிடைக்காதம்.


என்ன கொடுமை சார் படிச்சா வேலை கிடைக்காதம்  சனி போனதம் கிடைக்குமாம் ....

முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினர்

முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினர்

முதல்வர் கோட்டையில்  கொடி ஏற்றி  சுதந்திர தினத்தை  கொண்டாடினர்

முதல அவரால  எந்துருச்சு  நிக்க முடியுமா  இன்னும் எத்தன நாள் தான்பா இவரு குடும்பம் ஆட்சி செய்யும் .படத்த நல்ல பாருங்க  பக்கதுல ஒருத்தர் இவர தங்கி புடிச்சு இருக்காறு. ஒருத்தர் நல்ல  எந்துருச்சு நிக்க  குட முடியல அவரு எப்படிபா  நாட்டை ஆட்சி
செய்வாரு.

இவரு ஆட்சி செஞ்சு கிளுச்சது போதும் .

நேற்று திருச்சில ஜெயலலிதா  பேசினது என்னமோ அரசியலுகாக பேசினாங்க  ஆனா அதுல எத்தன உண்மைகள் தன் குடும்ப  சுயநலத்திற்கு  மட்டும் ஆட்சி செய்கிறார் .

தமிழ்நாட்டுல அவரு குடும்பம் மட்டும் தான்  இருக்குனு நினைசுட்டாறு போல அதன்
அவரு குடும்பத்துல எல்லாரும் ஒரு பதவில இருகாங்க .

ஜெயலலிதா சொன்னதுல எனக்கு பிடித்தவை .

உலக நாடுகளில்  எங்கு வேணாலும் சென்று பாருங்கள் அல்லது இங்கு நடப்பது போல எங்கு இருக்க என்று  அதாவது
 அப்பா முதல்வர்
மகன்  துணை முதல்வர்  இன்னொரு மகன் மத்திய அமைச்சர்  பேரன் மத்திய அமைச்சர்
மகள் நாடாளும் மன்ற உறுப்பினர்  மகளின் மனம் கவர்தவர்  மத்திய அமைச்சர் .

என்ன கொடுமை சார் இது ....
 இதைவிட  பெரிய கொடுமை  தென் இந்தியாவில் மீடியா  எல்ல மீடியாவும்  அதாவது  டிவி  ரேடியோ டெய்லி பேப்பர்  வரபுத்தகம்  ஏன் DTH  சினிமா விநியோகஸ்த்தர்   என எல்லாமே அவங்க தான் .

நடக்குறது  செய்திய இல்லை அவங்க  நினைக்குறது தான்  செய்தியா.........

Saturday, August 14, 2010

வம்சம் திரைப்பட விமர்சனம்

வம்சம் திரைப்பட விமர்சனம்

வம்சம் பெயருக்கு ஏற்ற கதையும் நடிகர்களும் ஹீரோவை தவிர. கஞ்சா கருப்புவின்  காமெடி பரவ இல்ல. இயக்குனர் பண்டிரஜ்கு இது ரெண்டாவது படம் பசங்க படத்திற்கு கிடைத்த பெயர் இதில் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் .

வம்சம் ரெண்டு ஊரில் உள்ள தேவர் இன மக்களின் பாரம்பரியம் பற்றிய கதை .அந்த ஊரில் வாழும் ஒவ்வரு   குடும்பத்திற்கும் ஒரு வம்ச பெயர் உண்டு அந்த ஊர் திருவிழாவில் கதை தொடங்குகிறது ஒவ்வரு வம்சமும் கட்டாயம் எங்கு இருந்தாலும் அந்த திருவிழாவுக்கு  வந்து கலந்து  கொள்வார்கள்  மொத்தம் 15 நாள் திருவிழா நடக்கும் அந்த நாட்களில் கருவறுக்கருது அதாவது ஒவ்வரு வம்சமும் தங்களின் எதிரியை திட்டமிட்டு கொலை செய்வது . அந்த திருவிழா நாளில் இறக்கும் அந்த நபரை  முறை படி  அடக்கம்  செய்ய கூடாது  அவரை ஒரு கட்டில் வைத்து எடுத்து சென்று  ஒரு அனாதை பிணம் போல எரித்து விடுவார்கள்  இது அந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய அவமானம் அந்த திருவிழாவில்  இறுதி நாள் அன்று ஒவ்வரு வம்சைத்த சார்ந்த  அனைவரும் வந்து தங்களது கலஞ்சு வங்கி செல்வர்கள் இதில் மற்ற அணைத்து வம்சத்தில் நிறைய வாரிசுகள் ஆனால் அன்பரசு அதாவது படத்தின் ஹீரோவின்  வம்சத்தில் மட்டும் அவர் ஒருவர் மடும் தான் வாரிசு இப்படி தொடகுகிறது கதை.

அன்பரசுவும் அவரது அம்மாவும்  ஊருக்கு வெளியில் அமைதியாக வாழ்கிறார்கள்
அன்பரசுவின் அப்ப ஒரு ரவுடியாக வாழ்ந்தவர் அதனால் அன்பர்சுவிற்கு அவரது அம்மா
எந்த பிரச்சனைக்கும் போக கூடாது என்று வளர்த்து வருகிறார். அது போல  அவரும் அப்பாவின் எதிரிகள் அவரை வெட்ட வரும் பொது சண்டை போடாமல் ஓடி தப்பிக்கிறார்
அவரை சீனி கண்ணு அதாவது  ஜெயப்ரகாஷ் படத்தின் வில்லன் காப்ற்றுகிறார் .

அன்பரசுவின் பக்கத்துக்கு ஊர் மலரை காதலிக்கிறார் அவரது அப்பாவை சீனி கண்ணு  ஊர் திருவிழாவில் கொன்று விடுகிறார் இதனால் மலர் அவரை ஊர் முச்சந்தியில்  வைத்து சனியை கரைத்து ஊற்றி துடைப்பதால்  அடித்து  அவமான படுத்திகிறார். இதனால் மலர் மேல சனி கரைத்து ஊற்றி அவரது முடியை வெட்டி  அவளை   அவமான  படுத்த சீனி கண்ணு  அவரது மகனை  அனுப்புகிறார்.

 அன்பரசுவும் மலரும்  தனிமையில் இருக்கும் பொழுது  மறுத்து அவரது  ஆட்களும் சூழ்ந்து கொள்கிறார்கள் அப்பொழுது அன்பரசு அவர்களை அடித்து மலரை காப்பாற்றுகிறார் இதனால் அவருக்கும்  சீனி கன்னுவிற்கும் மோதல் ஏற்படுகிறது இதனால் அன்பரசுவிற்கும் மலரின் kadhalirku piraachanai yerpadikirathu  . பின்பு தான் அன்பரசுவின் அப்பாவை கொன்றது சீனி கண்ணு தான் என்று அவரது அம்மா கூறுகிறார்.
 

சீனி கண்ணு அன்பரசுவை திருவிழாவில் கொள்ள சொல்கிறார்
ஆனால் அவர்களால் கொள்ள முடியவில்லை இதற்கு இடையில் சீனி கண்ணு வெட்ட படுகிறார் அவரை வெட்டியது அன்பரசு தான் என்று மருது அன்பரசுவை  கொள்ள வருகிறார்  ஆனால் அன்பரசுவின் அம்மா அவரை தடுக்கிறார் பின்பு அன்பரசு மருதை எதிர்த்து சண்டை போட்டு
வென்று மலரை கல்யாணம் பண்ணி தனது வம்சத்தை வளர்கிறார் .

இது தான் கதை .


அன்பரசுவின் அப்பாவாக கிஷோரும்  சீனி கன்னுவாக ஜெய பிரகாஷும் வாழ்ந்து இருகிறார்கள்.
அன்பரசுவின் நடிப்பு அப்படி ஒன்றும் இல்லை சுனைன  நடிப்பில் வென்று விட்டார் .




பாடல்கள் அனைத்தும் சூப்பர்
மொத்தத்தில் படம் ஒரு தடவை பார்க்கலாம் சுமார்.

Friday, August 13, 2010

பெண்ணின் காதல்

 பெண்ணின் காதல்

பெண்ணின் காதல்
ஒரு போலி வேடம்
அவளின் ஒரு சுயநல செயல்
அதில் ஆண் ஏமாந்து
வலியை பரிசாய் பெறுகிறான் .......

நேற்று எந்திர மனிதன்

 நேற்று எந்திர மனிதன்

நேற்று என் வாழ்வில் ஒரு மிக முக்கியமான நாள் .
ஏன் ஒரு மிக பெரிய திருப்பம்
அது காதலை ஒழித்து
நட்பு வென்ற தினம் ...  

நண்பர்கள்

நண்பர்கள்

என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்
நண்பர்கள் உயிர் தோழர்கள் மட்டும் அல்ல
வெற்று உடம்புக்கு உயிராய் இருப்பவர்கள் .
நண்பன் இல்லாத வாழ்கை
காற்று இல்லாத உலகம்
ஏன் அது உலகமே இல்லை .

அனைவரும் சொல்வார்கள்
காதல்  இல்லாத மனிதன் இல்லை
என்றும் காதல் இல்லாத உலகம் இல்லை என்றும்
ஆனால் காதல் இல்லாத மனிதனை பார்க்கலாம்
நட்பு இல்லாத மனிதன் உண்டா ய
ஏன் உயிரினம் உண்டா ........  

Wednesday, August 11, 2010

அம்மா


அம்மா
                                         " உணக்காக உனக்கு  உயிர் கொடுத்த  உயிரை
நி  வணங்கலாம்  ,
உன்னை காதலிக்கிறேன் என்று  உன்னை

கொள்ளும் உயிரை
 நி வணங்கலாமா ! !" 

மாநகர பேருந்தில் பகல் கொள்ளை

மாநகர பேருந்தில் பகல் கொள்ளை

சென்னை மக்களின்  நாடி துடிப்பு . அப்ப மாநகர  பேருந்தில் எத்தனை வகை .
Deluxe Blue Board  Bus
A/C Bus
Green Board Bus
White Board Bus
M Service Bus
அப்ப எத்தனை வகை . யாரு கேட்ட இத்தனை வகை பஸ்லாம் வெறும்  பஸ் போர்டு கலரையும் பஸ் படியையும் மத்திடு இது  Deluxe  Bus சொல்லி டிக்கெட் ரேட்ல பகல் கொள்ளை  அடிகிரங்க பேருக்கு தான்  Deluxe பஸ்னு பேரு அதுவும் இவ்வளவு பயணிகள்
தான் ஏறனும்னு ஒரு விதி வைத்து  இருந்தால் பரவில்லை எல்ல வண்டியும் போல தான்  இதுவும் இருக்கும் நிறைய பஸ்சும் இது தான் வரும் ஆனால் டிக்கெட் ரெண்டு மடங்கு அதிகம் இத்தனைக்கும் deluxe  பஸ்சுக்குள்ள நல்ல காத்தும் வராது நிறைய பயணிகள் நின்னுகிட்டு  போகவும் முடியாது யாரு கேட்ட இந்த பஸ்லாம் .

இதுவாச்சும் பரவில்ல M சர்வீஸ் பஸ்சும்  கிரீன் போர்டு பஸ்சும் பஸ் போர்டு கலர் மட்டும்  மாத்திட்டு அதுக்கு  அதிகம் காசு  வாங்குறாங்கல அத எங்க போய் சொல்லாறது

ஆனா இந்த A/C  பஸ் பரவில்லை காசு உள்ளவங்க நல்ல சொகுசா போகலாம் மத்தவங்க எங்க போறது .
 இந்த அரசு தான் மக்களை  காப்பாற்றுமா  அரசு.
 பேருந்து கட்டணம் உயரவில்லை என்று மட்டும் பேட்டி நல்ல கொடுபங்க .

 மக்களை  எப்படிலாம் ஏம்மாதலம்னு  புதுசு புதுசா  தினுசு தினுச ரூம் போட்டு யோசிபங்களோ............
 

எந்திர மனிதன் இன்று

 எந்திர மனிதன் இன்று 

இன்று நான் அந்த சாப்ட்வேர் கம்பனிக்கு  Interview சென்றேன் பெருங்குடியில் இருக்கும் அந்த கம்பெனி எப்ப எவளவு பெருசு அதுக்குள்ள எத்தன கமபனி இருக்கு எப்ப ரொம்ப பெரிசு  ஆனா எனக்குலாம் அது சரி வராது வாழ்க்கைலே முதல் முறைய  10 வது  மாடிக்கு போனேன் .

அங்க உள்ள போய் interview அட்டென் பண்ணேன் முதல் டெஸ்ட் கிளியர் பண்ணிட்டேன் ஆனா அடுத்த நேர்முக தேர்வில்  நீங்க படிச்சதுக்கு இதுக்கும்  சம்பதம் இல்ல அதனால்  வேலை  இல்லைன்னு அனுபிட்டாங்க
 அப்புறம் முக்கியமா சாப்ட்வேர் கம்பெனிலாம் ஒரு ஹை கிளாஸ் குகை தான்  உள்ள போய்ட்ட  வெளிய உலகமே அழிச்சலும் தெரியாது , ஒரு காற்று ஓட்டம் இருக்காது ஒரு
இயந்திர  ரோபோ வாழ்கை வேலை தான்.

காதல் கொசு


காதல் என்பது கரண்ட் இல்லாத
     டைம்ல வர கொசு மாதிரி  
          தூங்கவும்  முடியாது 
                  துரத்தவும்  முடியாது         

Tuesday, August 10, 2010

பெண்ணின் உடை

பெண்ணின் உடை

உடம்பை மறைக்கவே  உடை
இது நாகரிகம்
உடம்பை திறந்து காட்டவா உடை
இதுவா நாகரிகம்  

காமம்

 காமம்
 ஐந்து நிமிட சுகத்திற்கு
மனிதர்களிடம்  ஏன் இந்த வெறியாட்டம்
அதிலும் பெண்ணின் அங்கதை பார்க்க.......

எந்திர மனிதன் இன்று

 எந்திர மனிதன் இன்று

இன்று நான் என் நண்பர்கள்  ரூமிற்கு  சென்றேன் அங்கு எப்பொழுதும் போல நாளை எங்கு வேலை தேடு செல்லலாம் என்று பேசினோம் பிறகு மதியம் முட்டை  குழம்பு வைத்து சமைத்து சாப்டோம் .
 மாலை அங்கு இருந்து இன்னொரு நண்பர்கள் ரூமிற்கு வந்து நாளை ஒரு சாப்ட்வேர்  கம்பனிக்கு போகலாம் என்று முடிவு எடுத்து அதற்கு  அந்த சாப்ட்வேர் எனக்கு சொலி கொடுத்தார்கள் அவளவுதான்  இன்றைய பொழுது முடிந்தது .


ஆனால் இன்று என் மனதில் நிறைய  புது புது விஷயம் தோன்றியது அவைகள் விரைவில் இங்கு எழுத்து வடிவில் அதில் முக்கியமானவை  மக்களின் அன்றாட பிரச்சினைகள் .

ஒன்றை தேடி ஒன்றை தொலைத்தான்

 ஒன்றை தேடி ஒன்றை தொலைத்தான்

மனிதன் பணம் என்ற ஒன்றை தேடி
அவனது வாழ்வில் நிம்மதி சந்தோசம்
ஏன் அவன் வாழ்வே கூட தொலைத்துவிட்டான் ......... 

Monday, August 9, 2010

காதல் நஞ்சு

காதல்
 அளவுக்கு மிஞ்சினால்  அமிர்தமும்  நஞ்சு
 நாளாக  நாளாக  காதலும் நஞ்சு ....

வேலை தேடும் பொறியாளர்கள் ( Engineers )

வேலை தேடும்  பொறியாளர்கள்  ( Engineers )

இந்த வருடம் மட்டும்  பொறியியல் படிப்பில் சேர்த்தவர்கள்  1 லெட்சம் பேர்கள் .
ஆனால் படித்து முடித்து வேலை தேடுபவர்கள் எத்தன லெட்சம் பேர் என்று தெரியுமா அது பல  லெட்சம்  பேர்கள் நல்ல   வேலை கிடைத்தால்  அவனை  ஊர் பாராட்டும் அனால் வேலை கிடைகமல் வேலை தேடுபவனை அந்த ஊர் அவனுக்கு மனது அளவில் ஒரு இறுக்கத்தை தான் கொடுக்கும் .

வேலை தேடுபவன் படு ஓன்று என்றல்  சின்ன கம்பெனில வேலை  பார்ப்பவன் பாடு  ஆதை விட மோசம்
மற்றவர்கலம்  என்னட அவன்  மதம் 30000 சம்பாதிகிரண்   நி என்ன இன்னும் 6000 தான் சம்பாதிக்கிற என்று  கேவலமாக   பேசும் மக்கள். .
 mechanical படிச்சுட்டு  வேலை தேடுறது இருக்கே ஆதை விட வேற பெரிய கொடுமை கிடையாது .

சிப்காட்ல வேலை தேடறது  இருக்கே அது ஒரு பாத யாத்திரை வரிசய எல்லாம் கம்பெனி போய்  அங்க உள்ள வாட்ச்மன் கிட்ட இங்க வேலை இருகனு கேக்கணும். அவங்க கேட் உள்ளே விட மட்டாக தப்பி தவறி  ஒரு கம்பெனில  Resume   கொடுத்துட்டு போங்க  கால் பண்ணு  வாங்கனு  சொலுவாங்க.அது தான் அப்ப எங்களுக்கு பெரிய சந்தோசமா இருக்கும் .


                     இது போல இன்னும் நிறைய இருக்கு  அவை  தொடரும் .......... 

எந்திர மனிதன் இன்று

 எந்திர மனிதன்  இன்று வெட்டிய இணையத்தில்  பொழுதை கழித்தேன் வேற எங்கும் வேலையும்  தேட செல்லவில்லை

வெட்டியா எனது  ரூமில்  தான்  டிவியும்  இணையத்தில் தான் எனது வெடி வேலையாக   நண்பர்களுடன்  அரட்டை அடித்து கொண்டு இருந்தேன் .

எனது காதலி ( வருகால மனைவி ) கூட ரெண்டு நல  சண்டை அதன் முழுக்க அவள்  நினைப்பாகவே இருந்துச்சு   ஆனா நான் அவள் செல்லுக்கு    கால் பண்ண அவ அட்டென் பன்னால ஏன்ன நான் அவள ரொம்ப  கஷ்டபடிதுடேன்  அதன்.
           அது ரொம்ப கவலைய இருந்துசு எனக்கு .

Sunday, August 8, 2010

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் சுஜாதா பற்றி எங்கே



எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் சுஜாதா பற்றி எங்கே

சுஜாதா எந்திரனின் வசனகர்த்த.
 எந்திரன் இசை வெளியீட்டு விழாவில்  அந்த பெரிய இயக்குனர்  தயாரிப்பாளர்  இசைஅமைப்பாளர்  அப்புறம் அந்த பெரிய கதாநாயகர்  கதாநாயகி பற்றி தான் எல்லாரும் பேசினாங்க.

சுஜாதா தான் அந்த படத்துக்கு எந்திரன்  என்று தமிழில் பெயர் வைத்தவர் மற்றும் வசனம் எழுதி உள்ளார்  ஷங்கர்   ஒரு பெரிய இயக்குனர் அக அவர் ஒரு முக்கிய காரணம்.
ஆனா  அந்த இசை வெளியீட்டு விழாவில்  அவரை பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் பேசவில்லை.
                என்ன கொடுமை  சார்  இது .   

இது தான் ஷங்கர்   சுஜாதாவின்  மறைவிற்கு  செலுத்தும்  மரியாதை. 

நேற்று நான் முதல் முறையாக மாமல்லபுரம் சென்றேன்



நேற்று நான் முதல் முறையாக மாமல்லபுரம் சென்றேன்.  பைக்ல கார்ல இல்லைங்க பஸ்ல தான் அதுவும் வெறும் Rs 30  டிக்கெட்ல தாங்க என் வாழ்க்கைலே நேத்து தான் முதல் முறைய அங்க போனேன் ஆனா நான் சென்னை வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அனா நேத்து தான்  போக முடிச்சது ஆனா நான் மட்டும் போகல என் நண்பர்கள் மொத்தம் ௧௦ பேர் சேர்ந்து போனம் நாங்க கிளம்புன நேரம் 3 .30 அந்த 30 ரூபா டிக்கெட்ல தான் போகணும்னு அதானே மொத்தம் போகவர அதுவும் நாம சென்னை மாநகர் பேருந்தில் திருவன்மியுர்ல  இருந்து பஸ் ஏறி கோவளம் வரை ஒரு பஸ் கடைசி கோவளம் வரை பயங்கர கூட்டம்  நின்னுகிடே  தான்க போனம் நான் கோவளம் போறதும் அதன் முதல் முறை நான் மட்டும் இல்ல என் நண்பர்களில் 8 பேருக்கு அதன் முதல் முறை  ECR  போற வழி எல்லாம் பணக்காரர்கள் பொழுதுபோக வரும் நெறைய  இடம் அத்தைலம் பார்கவே பிரமிப்பாவும்  பயமாவும்  இருந்துச்சு என அங்க எல்லாம் மனசுக்கு உண்மையான சந்தோசம் கிடைக்காது வெறும் வெளி தோற்றம் மட்டும் தான் இருக்கும் கோவளம் வரைக்கும் பஸ்ல நாங்க பண்ண சேட்டை அப்படிலாம் ஒன்னும் பன்னால  கோவளம் போனோம் ஆனா போட் ஹவுஸ் போகல அங்க உள்ள  பீச்கு தான் போனம் போய் அங்க ஒன்னும்  இல்லைன்னு  தெருசுகிடோம் ஆனா காற்று  கொஞ்சம் நேரம் வாங்கிட்டு திரும்பவும் பஸ் ஏறி மாமல்லபுரம் போனம் போற வழில பேரூந்த போலீஸ் மறிச்சு நிருதினாக எதுக்க இருக்கும் யாராவது அமைச்சர்  போவாக  ஆதை மாதிரி 10 நிமிஷம் கழிச்சு மு.க.ஸ்டாலின் கார்ல சிட்ட பரந்தரு நான் மட்டும் முதல் அமைச்சர வந்தன அமைச்சர்லம் பஸ்ல தான் போகணும்னு சட்டம் கொண்டு வருவேன்  என்ன  அப்பதான் பஸ் டிக்கெட் ரேட் எவலவுனு அவகளுக்கு தெரியும் அதனால  மக்கள் எவ்வளவு கஷ்டம் படுரகனு தெரியும் முக்கியமா பஸ்சு என்ன வேகமா போகுதுன்னு தெரியும் . அப்பறம்  என்ன நாங்க அங்க போகும் பொது மணி 6  எல்லாரும்   அங்க இருந்து கிளம்புனாக  ஆனா  நாங்க அப்பதான்  அங்க போனம் அந்த கோட்டையா கொஞ்சம் பார்த்துட்டு அப்புறம்  மணி ஆகிடுச்சுனு  பாதுகாவலர் அங்க இருந்து போக சொல்லிடறு அப்புறம் கடற்கரை கோவில் பாக்கலாம்னு போனோம் ஆனா அதுவும் முடிட்டாங்க அப்புறம் என்ன வேற வழி இல்லாம கடற் அலைள கொஞ்சம் நேரம் விளையாடிட்டு அங்க ஒரு சின்ன இட்லி கடைல நைட் சாப்பாட்ட முடிச்சுட்டு கிளம்பிட்டோம் நைட் ரூம்  வர 10 மணி ஆகிடுச்சு . கடைசியா ஒன்னு நேற்று என் நண்பன் தமிழுக்கு பிறந்த நாள் அதனால தான் இந்த ஊர்  சுற்றல் .  

Saturday, August 7, 2010

முதலில் வலை பூவில் தமிழில் எழுத ரொம்ப கஷ்டபடுகிரேன்

முதலில் வலை  பூவில் தமிழில் எழுத ரொம்ப  கஷ்டபடுகிரேன்  எனது  தமிழில் பிழை  ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

ஆனந்தா விகடனில் என்னுடைய விருப்பமான எழுத்தாளர் திருமாவேலன்

ஆனந்தா விகடனில்  என்னுடைய  விருப்பமான எழுத்தாளர்  திருமாவேலன் 

  எப்பொழுதும் ஆனந்தா விகடனில் நான் விரும்பி படிப்பது திருமவேலனின்  கட்டுரைகள்  இந்தவாரம்  அவர்  இலங்கைக்கு  செல்ல விற்கும் தூதர் பற்றி அவர் எழுதிய  கருத்தகள்  ஆனைத்தும் உண்மை ஆதிலும் அவரது நண்பர் வரைந்த  ஓவியம் பற்றி கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட  வேண்டும்  இது வரை  இந்திர  காந்தி  காலத்தில் இருந்து இது வரைக்கும்  சென்ற தூதர்களை நிற்க வைத்து  அவர்களை பிடித்தே  நடந்து  சென்று விடலாம் என்று   குறிபிட்டு இருந்தார்  அதிலும் கருணாநிதி பிரதமற்கு கடிதம் எழுத்துவது என்றும் நடக்கும் ஒரு தொடர்கதை என்றும் செல்லும் தூதர் அங்கு சென்று ராஜா பக்ஷேய்விடம்  பரிசு பெற்று திரும்பவ்ரே தவிர அங்குள்ள  தமிழ் மக்களை பார்த்து
அவர்கள் படும் துன்பங்களையும் அவர்ககளுக்கு வேண்டிய அன்றாட உணவு தங்க வீடு
வருமானத்திற்கு வேலை பற்றியும் இந்திய கொடுத்த 500 கோடி நிதி உதவி  பற்றியும் ஆதை எப்படி செலவு செய்திர்கள் என்றும் துளியும் கேட்காது தூதற்கு அது ஒரு சுற்றுலாவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு புனியமும்  இல்லை  என்றும் இன்னும் நிறைய நல்ல எழுதி இருந்தார் ஆனைவரும் கண்டிப்பாக ஆதை படியுகள் . 

சிறு குழந்தையாக வலை பூவில் இன்று முதல் நான்

சிறு குழந்தையாக வலை பூவில் இன்று முதல் நானும் இங்கு கிறுக்க வந்து உள்ளேன்
 எந்திர மனிதன் என்றவுடன்  இது சூப்பர் ஸ்டார் ரஜனிய  பற்றிய வலை பூ  இல்லை ரஜினி மட்டும்  இல்லை  எந்திரன் நாம் அனைவரும்  தினமும் எந்திர வாழ்கை தான் வாழ்கிறோம் அதில் என் வாழ்கையும்  ஏன் அரசியல் சினிமா புதகம்கள்  மட்டும் அல்லது  என்னை சுற்றி நடதவை அதில் என் கருத்து  மற்றும் என் காதல் கதையை கிறுக்க போகின்றேன்
  
Related Posts with Thumbnails