Thursday, October 21, 2010

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்

இலவசம் இலவசம் அரசாங்கம் தரும் இலவசம்


இன்று சென்னை கே கே நகரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச கலர் டிவி கொடுக்கபட்டது இதில் விசேஷம் என்னவென்றல்  குடிசையில் வாழும் ஏழை மக்களும் சேரி பல கோடிக்கு சொந்தமான பணகரரும் சேரி அந்த இலவச கலர் டிவியா  வாங்க ஒரு வரிசையில் நின்னது தான்  இலவசம் என்றல் பிணமும் கூட வரும் போல அதாவது காசு என்றல் பிணம் கூட வாயா திறக்கும் என்ற சொல்வது போல இந்த அரசு இலவசம் இலவசம் அனைத்தும் இலவசம்  என்று கொடுத்து  நம் மக்களை நல்ல சோம்பேறி ஆக்கி உள்ளது.

டிவி வாங்க வந்த பணம் படைத்தவரிடம்  கேட்டதுக்கு அரசு இலவசமாய் கொடுப்பதை ஏன் விட வேண்டும் நங்கள் விட்டால் எங்களுக்கு உரிய டிவியை வேறு ஒருவர் பெற்று அதன் பலனை பெற்று விடுவர் என்று கூறுகின்றனர்.

உண்மையில் அரசாங்கம் நமக்கு தருவது இலவசம் அல்ல நாம் செலுத்தும்  வரி முலம் தான் அரசு நமக்கு இதை தருகின்றது ஆனால் நாம் அனைவரும் நாமளா அரசுக்கு வரி செலுத்துகின்றோம் என்று இலவசம் என்றல் வாயா பிளந்துகிண்டு போய் அதை வாங்க நிற்கின்றோம் ஆனால் அந்த இலவசம் நமக்கு பின் நாளில் அது பெரிய பிரச்சனையாக வரும் அது என்ன பிரச்னை என்று நமக்கு தெரியும் அது வேறு ஒன்றும்  அரசு நாம் செலுத்தும் வரியில் இருந்து  மக்களுக்கும் நாட்டிற்கும் உதவும் வகையில் எந்த ஒரு திடத்தையும் செய்யாமல்  அனைத்தையும் இலவசமாக கொடுப்பதால் அரசின் கஜான இந்த இலவச திட்டத்திற்கே பல கோடியே விழுங்கி விடுகிறது பின் அரசாங்க கஜான காலி ஆகி விடும் பின் அரசு என்ன செய்யும் இருக்கும் அனைத்தும் வரியையும் உயர்த்தும் வரி உயர்ந்தால் அனைத்தும் பொருள்களின் விளையும் உயரும் உயரும் என்ன உயரும் உயர்ந்து விட்டது இதை எல்லாம் அறியாமல் நம் மக்கள்  இன்னும்  இலவசம் இலவசம் என்று ஏமார்ந்து  கொண்டு இருக்கின்றனர்.

இதையே  இலவசம் இலவசம்  என்று சென்னையில் ஒரு துண்டு சிட்டு பெருசுரம் செய்ய பட்டது இந்த செய்தி அனைவரும் அறிந்து இருப்பிர்கள் அதில் உள்ள செய்தி என்னவென்றல்

இன்றைய தமிழகம்  என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா?  தமிழ்  நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது  மட்டுமா அரசு செய்யும் ஒவ்வறு கடன் தள்ளுபடி திட்டமும் இந்த இலவச திட்டத்தை போல தான் கடன் தள்ளுபடி  என்று இந்த அரசு அறிவித்தல் தான்  நம் இன்று அனைத்து பொருள்களின் விலையும் வின்னைதொடும் அளவிற்கு  உள்ளது .


ஆகா  இனி மேலாவது  இலவசம் என்று சொல்லும்  அரசை நம் மக்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம்  வேண்டாம்.

3 comments:

  1. எனக்கு ஒரு மிகப்பெரிய வருத்தம் .. இதைப் படித்தவர் ஒருவர் கூட கருத்துரையிடவில்லையே என்றுதான் ..
    என்ன உலகமடா இது,,
    பகிர்வுக்கு நன்றி தோழரே.
    அப்படியே என் மன உருக்கல்களை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Desktop Showrooms in Chennai | Printer prices in chennai | Buy Tablets online chennai

    ReplyDelete
  3. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Ias academy in chennai | Best ias coaching center in chennai | Ias coaching center in chennai

    ReplyDelete

Related Posts with Thumbnails