பேருந்து பயணம்
மனதில் எதாச்சும் கஷ்டமா இருந்துச்சுன நான் செய்யறது பஸ் ஏறி எங்கயாவது பஸ்ல அப்படியே ரொம்ப தூரம் போறது. இந்த மாதிரி பஸ்ல போன நான் பலதார பட்ட மக்களை பார்க்கலாம் அந்த மாதரி பார்க்கும் போது நாம நம்ம கஷ்டத்த விட நிறைய பேர் நம்மை விட அதிக கஷ்டத்துல உள்ளதை பார்க்கலாம் அதை வைத்து நம்ம கஷ்டத்த பெரிசா நினைக்கமா இருக்கும் நம்ம மனசு.
அது மட்டும் நிறைய சந்தோசமா உள்ளவங்கள பார்க்கலாம் அந்த மாதிரி ஒரு பயணத்தின் பொழுது நம் மனது என்னதான் கஷ்டத்துல இருந்தாலும் சந்தோசமா உள்ளவங்கள பார்த்தல் நம் மனதும் அவர்கள் சந்தோசத்தை மனது அளவில் நினைத்து கஷ்டத்தை மறந்து சந்தோஷ படும்.
என் ஒரு பயணத்தின் பொழுது ஒரு நல்ல இளைய ராஜாவின் பாடல்களோ இல்லை ரஹ்மான் பாடல்களோ ஏதோ ஒரு நல்ல பாடல்கள் கேட்டுகொண்டு சென்றல் நம் பயணிப்பதும் தெரியாது நம்மையே மறந்து நம் கவலைகளை மறந்து அந்த பாடலில் முழ்கி விடுவோம்.
ஒரு பஸ் பயணத்தின் போது நாம் பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கிறோம் அவர்கள் செய்யும் செயல்கள் நம் என்னத்தை மற்றும் என் பஸ்சில் நடக்கும் சிறு சண்டை கூட நம் என்னத்தை மாற்றும்.
ஏன் பஸ்சில் போகும் போது நாம் எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு அது தாங்க வேடிக்கை பார்க்குறது வேடிக்கை பார்த்துகிடே போனாலும் நாம பார்க்குறது கூட நம் மனசு மாற்றும் .
கவலையுடன் பஸ்சில் ஏறுங்கள் பஸ்சில் இருந்து இறங்கும் போது கவலைய பஸ்சோடா
இறங்கும் போது இறக்கி விட்டுட்டு வாங்க.
really it is true
ReplyDeleteநானும் இப்படி செயவதுண்டு.
ReplyDeleteநான் எப்பொழுதும் இதைத்தான் செய்வேன்
ReplyDelete